ஒரே பொண்ணோட என்னால இருக்க முடியாது.. அதுக்கு நான் சரிபட்டு வரமாட்டேன்..சல்மான் சொன்னத பார்த்தீங்களா?

மும்பை : நடிகர் சல்மான் கான், பாலிவுட்டின் சூப்பர் ஹீரோவாக பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அவரது பல படங்கள், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஹிட் படங்களாக அமைந்துள்ளன. தொடர்ந்து 57 ஆண்டுகளை கடந்தும் அவர் முன்னணி ஹீரோவாக காணப்படுகிறார்.

சமீபத்தில் ஷாருக்கானுடன் இணைந்து பதான் படத்திலும் கேமியோ ரோலில் கலக்கல் பர்பார்மென்ஸ் கொடுத்திருந்தார் சல்மான்கான்.

நடிகர் சல்மான்கான்

நடிகர் சல்மான்கான்

நடிகர் சல்மான்கான் பாலிவுட்டின் பிரபல மற்றும் முன்னணி ஹீரோவாக பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 57 வயதாகும் சல்மான் கான் திருமணம் குறித்து அவரது ரசிகர்கள் பேசாத நாளில்லை என்று கூறுமளவில் அவரது திருமணம் எப்போதுமே பாலிவுட்டின் முக்கியமான விஷயமாக இருந்து வருகிறது.

திருமணம் செய்யாத சல்மான்

திருமணம் செய்யாத சல்மான்

அவரது தம்பி, தங்கைகளுக்கெல்லாம் திருமணமாகி வளர்ந்த பிள்ளைகள் உள்ள நிலையில், சல்மான்கான் மட்டும் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கிறார். இது பாலிவுட்டில் விவாதப்பொருளாக உள்ள நிலையில், தற்போது பாலிவுட்டின் லூலியா வந்தூருடன் சல்மான் டேட்டிங்கில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

திருமணம் குறித்து சல்மான் கருத்து

திருமணம் குறித்து சல்மான் கருத்து

தொடர்ந்து சல்மான் கானுடன் ஐஸ்வர்யா ராய், கத்ரினா கையிப் என பல நடிகைகள் கிசுகிசுக்கப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் மைனே பியார் கியா படத்தில் அவருடன் இணைந்து நடித்த பாக்யஸ்ரீ, சல்மான் குறித்து முன்னதாக அவரது திருமணம் குறித்து அளித்திருந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காதலிப்பதை விரும்பாத சல்மான்

காதலிப்பதை விரும்பாத சல்மான்

அந்த ஒரு படத்தில் மட்டுமே இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அப்போது திருமணம் செய்து கொள்ளாதது குறித்து தான் சல்மானிடம் கேட்டபோது, நல்ல பெண்கள், தன்னை காதலிப்பதை தான் விரும்பவில்லை என்று அவர் தெரிவித்ததாக பாக்யஸ்ரீ தனது பேட்டியில் கூறியிருந்தார்.

நல்லவன் இல்லை என்ற சல்மான்

நல்லவன் இல்லை என்ற சல்மான்

இதுகுறித்து தான் தொடர்ந்து கேள்வி எழுப்பியபோது, தான் அந்த அளவிற்கு நல்லவன் இல்லை என்றும் தான் ஒரே பெண்ணுடன் தொடர்ந்து இருப்பதை விரும்பவில்லை என்றும் தனக்கு அது விரைவில் போர் அடித்துவிடும் என்றும் சல்மான் கூறியதாகவும் பாக்யஸ்ரீ தெரிவித்துள்ளார்.

சல்மான் பின்னால் போகும் பெண்கள்

சல்மான் பின்னால் போகும் பெண்கள்

சல்மான் விஷயத்தில் அவர் அதிகமாக பெண்கள் பின்னால் போவதில்லை என்றும் அவர்கள்தான், சல்மான் பின்னால் போவதாகவும் பாக்யஸ்ரீ தெரிவித்துள்ளார். தன் குடும்பத்தை போலவே, தன்னுடன் பழகும் பெண்களுடனும் சல்மான் பொசசிவ்வாக இருப்பதாகவும் அது தற்போதைய பெண்களுக்கு பிடிப்பதில்லை என்றும் பாக்யஸ்ரீ மேலும் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பாக்யஸ்ரீயின் பேட்டி

பாக்யஸ்ரீயின் பேட்டி

சல்மான் திருமணம் செய்துக் கொள்ளாததற்கு பல்வேறு காரணங்கள் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவர் தன்னுடைய பங்கிற்கு அவ்வப்போது பல்வேறு காதல் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்நிலையில் பாக்யஸ்ரீயின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X