Salman Khan: மேடையிலேயே சட்டை கழட்டிய சல்மான் கான்... மிரண்டு போன பூஜா ஹெக்டே!
மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள கிசி கா பாய் கிசி கி ஜான் திரைப்படம் வரும் 21ம் தேதி வெளியாகிறது.
ரம்ஜானை முன்னிட்டு வெளியாகும் இந்தப் படம், தமிழில் அஜித் நடிப்பில் ஹிட்டான வீரம் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது.
அப்போது மேடையிலேயே தனது சட்டையை கழற்றி பூஜா ஹெக்டேவை மிரள வைத்தார் சல்மான் கான்.

மேடையிலேயே சட்டையை கழட்டிய சல்மான் கான்: பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் கிசி கா பாய் கிசி கி ஜான் என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் இந்தி ரீமேக்காக கிசி கா பாய் கிசி கி ஜான் உருவாகியுள்ளது. அஜித் கேரக்டரில் சல்மான் கானும், தமன்னா பாத்திரத்தில் பூஜா ஹெக்டேவும் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது.
ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், சல்மான் கான், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்த ட்ரெய்லரில் சல்மான் கான் வழக்கம் போல தனது சிக்ஸ் பேக்கை காட்டி வில்லன்களை வெளுத்து வாங்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதனை பார்த்த ரசிகர்கள் சல்மான் கானின் சிக்ஸ் பேக் கிராபிக்ஸ் செய்யப்பட்டதை போல இருப்பதாக கமெண்ட்ஸ் அடித்தனர்.

சல்மான் கான் மேடையில் ஏறியபோதும் இந்த கமெண்ட்ஸ் வந்துகொண்டே இருந்தது. இதனால், மேடையிலேயே தனது சட்டையை கழற்றி மாஸ் காட்டினார் சல்மான் கான். தனது சிக்ஸ் பேக் கிராபிக்ஸ் இல்லை என்பதை காட்டுவதற்காக, மேடையிலேயே சல்மான் கான் இப்படி செய்ததை ரசிகர்கள் எதிர்பார்க்கவே இல்லை. முக்கியமாக மேடையில் இருந்த பூஜா ஹெக்டே மிரண்டே போய்விட்டார்.
ஒருபக்கம் பூஜா ஹெக்டே, இன்னொரு பக்கம் கிருத்தி சனோன் நின்றுகொண்டிருக்க, நடுவில் இருந்த சல்மான் கான் சட்டையை கழற்றியது ரசிகர்களுக்கே ஜெர்க் கொடுத்தது. லைட்டாக சட்டையை விலக்கி தனது சிக்ஸ் பேக் உடலை காட்டி கெத்து காட்டினார் சல்மான் கான். தான் நடிக்கும் படங்களில் கண்டிப்பாக ஒரு காட்சியிலாவது சட்டை இல்லாமல் வந்துவிடுவது சல்மான் கான் வழக்கம். ஆனால், தற்போது அதனை மேடையிலேயே அரங்கேற்றிவிட்டார்.

சல்மான் கான் சட்டையை கழற்றியதும், பூஜா ஹெக்டே மிரண்டு போகும் வீடியோவை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனிடையே, கிசி கா பாய் கிசி கி ஜான் பட ட்ரெய்லரை பார்த்துவிட்டு மர்ம நபர் ஒருவர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த சில தினங்களாக சல்மான் கானுக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வருகின்றன.
இந்நிலையில், நேற்று இரவு திடீரென சல்மான் வீட்டுக்கு கால் செய்துள்ள மர்ம நபர், கேஜிஎஃப் ஹீரோ ராக்கி பாய் என பேசியுள்ளார். மேலும், சல்மான் கானை வரும் 30ம் தேதி கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு சல்மான் கான் புல்லட் ப்ரூஃப் வசதியுடைய நிசான் பேட்ரோல் எஸ்யூவி ரக காரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











