Samuthirakani: சித்தார்த்தை கட்டிப்பிடித்தால்.. சமுத்திரக்கனி வெளிப்படுத்திய இந்தியன் 2 சீக்ரெட்ஸ்!
சென்னை: நடிகர் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் 12ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீடு கடந்த மாதம் 1ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் ட்ரெயிலர் வெளியீடு மும்பையில் நடத்தப்பட்டது.
விரைவில் படத்தின் பிரீ ரிலீஸ் பங்க்ஷன் ஹைதராபாத்தில் நடக்க உள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே படத்தின் பிரமோஷன்களுக்காக கமல்ஹாசன், சித்தார்த் மற்றும் ஷங்கர் உள்ளிட்டவர்கள் மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் இன்னும் சில தினங்களில் ரிலீசாக உள்ள இந்தியன் 2 படம் மிகப்பெரிய அளவில் மாஸ் ஹிட்டடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்தியன் 2 படம்: நடிகர் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் 12ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் 1996ம் ஆண்டில் வெளியான நிலையில் 29 ஆண்டுகளை கடந்து தற்போது 2வது பாகம் ரிலீசாகவுள்ளது. கடந்த 2018லியே இந்த படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் சூட்டிங் முடங்கியது. இந்நிலையில் கடந்த ஆண்டில் மீண்டும் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு தற்போது படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
இந்தியன் 2 பிரமோஷன்கள்: நடிகர் கமல்ஹாசன் முதல் பாகத்தை போலவே இந்த படத்தில் சேனாபதி என்ற கேரக்டரில் மிரட்டியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் மும்பையில் நடைபெற்ற நிலையில் இந்த ட்ரெயிலர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. முன்னதாக கடந்த மாதம் 1ம் தேதி படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட இடங்களிலும் படத்தின் ப்ரோமோஷன்களில் கமல்ஹாசன், ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் ஹைதராபாத்தில் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அப்பாவாக நடித்துள்ள சமுத்திரக்கனி: படத்தில் சமுத்திரக்கனி மிகவும் அழுத்தமான கேரக்டரில் நடித்துள்ளார். படத்தின் ஹீரோவாக சித்தார்த் நடித்துள்ள நிலையில் அவரது அப்பாவாக நேர்மையான அதிகாரியாக சமுத்திரக்கனி நடித்துள்ளார். தான் நேர்மையான அதிகாரியாக நடித்திருந்தாலும் அதிலும் ஒரு ட்விஸ்ட் உள்ளதாக சமுத்திரக்கனி தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் தானும் சித்தார்த்தும் அப்பா -மகனாக நடித்துள்ளதாக தெரிவித்துள்ள சமுத்திரக்கனி, மிகவும் அருமையான பிள்ளை என்று சித்தார்த்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் உண்மையிலேயே தாங்கள் அப்பா -மகனாகவே மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வித்தியாசமான கேரக்டர்: சித்தார்த்தை கட்டிப்பிடிக்கும் போது அவரது உடல் சூடு தனக்கும் தன்னுடைய உடல் சூடு அவருக்கும் தெரிந்ததாகவும் கூறியுள்ளார். இதனிடையே தனது கேரக்டர் குறித்து பேசியுள்ள சமுத்திரக்கனி, இவரை இப்படி பார்த்திருக்கிறோமே என்று ரசிகர்கள் நினைக்கும்போதே, இப்படி பார்க்கவில்லை என்று நினைக்க வைத்துள்ளதாகவும் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். இதுபோன்ற ஒரு விஷயத்தை ஷங்கர் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள இந்தியன் 2 படம் கடந்த மாதத்திலேயே ரிலீசாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் ஜூலை மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











