இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த படம்.. சசிகுமாருக்கு சுப்ரமணியபுரம் எனக்கு.. சமுத்திரக்கனி ஓபன் டாக்
சென்னை: அறிமுக இயக்குநர் அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகிபாபு, ரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்துள்ளன. அந்த வகையில் இப்படம் குறித்து நடிகர் சசிகுமாரின் உயிர் நண்பர் ஒருவர் மனம் திறந்து பேசியுள்ளார். சுப்ரமணியபுரம் போன்ற வெற்றியை பெறும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன்,யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி என பலரும் நடித்திருக்கும் திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இப்படம் வரும் மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது நீண்ட நாள் தோழியிடம் பட விழா மேடையிலேயே ப்ரோபோஸ் செய்தார். அப்போது அந்த புரோமோஷன் நிகழ்ச்சி காதல் விழாவின் கொண்டாட்டமாக மாறியது.

அக் 31-ம் தேதி திருமணம்?: டூரிஸ்ட் ஃபேமிலி பட புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், இந்த நிகழ்ச்சியில் முக்கியமான ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும். எனக்கு அவரை 6ஆம் வகுப்பில் இருந்து தெரியும். எனது தோழி அகிலா இளங்கோவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பதை விட அவரிடம் ஒன்று கேட்க வேண்டும்.10-ம் வகுப்பிலிருந்து நாம் நெருங்கிய நண்பர்களாக பழகி வருகிறோம். என்னை அக்டோபர் 31-ம் தேதி திருமணம் செய்துகொள்கிறாயா? I Love You so much என தெரிவித்ததும். அவரது தோழி கண்ணீர் விட்டு அழுதார். நான் இந்த நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம் என் அம்மா அவருக்கு பிறகு அகிலாதான் என மனம் திறந்து பேசினார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆகச்சிறந்த திரைப்படம்: அதன்பின்னர் பேசிய இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி, "இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த திரைப்படமாக டூரிஸ்ட் ஃபேமிலி இருக்கும். இலங்கைத் தமிழர்களுக்கு கண்டிப்பாக ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும். இப்படத்தை பார்க்கும்போது பெருமையும் கர்வமாகவும் இருந்தது. இப்படம் நிச்சயம் வெற்றி பெறும். சசிகுமாருக்கு எப்படி சுப்ரமணியபுரமோ, எனக்கு எப்படி நாடோடிகள் படமோ அதேபோன்று டூரிஸ்ட் ஃபேமிலி படம் உங்களுக்கு அமையும். மிகவும் நேர்மையான படமாகவும் அறத்தை பற்றி சொல்லும் படமாக இருக்கிறது. அன்பை பகிர்ந்து கொண்டு மனதிற்கு நெருக்கமான படைப்பை இயக்குநர் தந்துள்ளார்" என சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். பட புரோமோஷன் நிகழ்ச்சியில சமுத்திரகனி, டி.ஜே ஞானவேல், புஷ்கர் காயத்ரி, விஜய் ஆண்டனி , தமிழரசன் பச்சைமுத்து ஆகியோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் உருக்கம்: கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான குட் நைட் படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இப்படத்தை தயாரித்த நசரேத் பசலியான், மகேஷ் ராஜ் பசலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தையும் தயாரித்துள்ளனர். இதில் அவர்கள் கூறியதாவது, குட் நைட் படத்தின் கதையை கேட்டு தயாரிக்க யாரும் முன்வராத போது எனது அண்ணன் இப்படத்தை தயாரித்தார். வீட்டை அடமானம் வைத்து தயாரித்ததாக குட் நைட் பட இயக்குநர் கூறினார். குட் நைட் போன்ற ஒரு நல்ல படம் டூரிஸ்ட் ஃபேமிலி. நிச்சயம் மக்களுக்கு பிடித்த படமாக இது இருக்கும் என தயாரிப்பாளர்களும் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











