Samuthirakani: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் சமுத்திரக்கனி சாமி தரிசனம்.. தியானம் செய்து வழிபாடு

சென்னை: நடிகர் சமுத்திரக்கனி இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என கோலிவுட்டில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பன்முகத் திறமையை காட்டி வருபவர். தற்போது தெலுங்கில் இவருக்கு சிறப்பான வரவேற்பு காணப்படுகிறது. அதிகமான படங்களில் நடித்து வருகிறார். இவரது இயக்கத்தில் வெளியான நாடோடிகள், நிமிர்ந்து நில், அப்பா, வினோதய சித்தம் போன்ற பல படங்கள் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றவை.

இவரது நடிப்பில் அடுத்ததாக ராமம் ராகவம் படம் தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் டீசர் வெளியீடு சமீபத்தில் நடந்தது. அப்பா -மகன் உறவை மையப்படுத்தி அதிகமான படங்களை உருவாக்கியுள்ள சமுத்திரக்கனி, இந்தப் படத்திலும் அப்பா -மகன் உறவை மையப்படுத்தியே நடித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பாலா, சமுத்திரக்கனி நடிகராக தன்னை நிரூபித்து விட்டதாக கூறினார்.

Actor Samuthirakani visits Melmalaiyanur Angalamman temple

நடிகர் சமுத்திரக்கனி: நடிகர் சமுத்திரக்கனி நடிகர். தயாரிப்பாளர். இயக்குனர் என கோலிவுட்டில் பன்முகத் திறமைகளை காட்டி வருகிறார். கோலிவுட்டில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் தொடர்ந்து அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களின் படங்களில் இணைந்து நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் வில்லனாகவும் கேரக்டர் ஆர்டிஸ்ட்டாகவும் ஹீரோவாகவும் நடித்து வரும் சமுத்திரக்கனி, தொடர்ந்து படங்களை இயக்கியும் வருகிறார். மேலும் தரமான பல படங்களை தயாரித்தும் வருகிறார். தற்போது தெலுங்கிலும் அதிகமான படங்களில் நடித்து வரும் சமுத்திரக்கனி, அங்கும் தனக்கான ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.

மேல்மலையனூர் கோயிலில் சாமி தரிசனம்: சாட்டை போன்ற சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் கதைக்களங்களையும் தேர்ந்தெடுத்து சமுத்திரக்கனி நடித்து வருகிறார். அந்த வகையில் இது போன்ற படங்களுக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை தருவதில்லை என்ற ஆதங்கத்தை அவ்வப்போது அவர் வெளிப்படுத்தி வருகிறார். கமர்சியல் படங்களுக்கு இருக்கும் மவுசு நல்ல கதைக்களங்களுடன் வெளியாகும் படங்களுக்கும் கிடைத்தால்தான் இது போன்ற படங்களை இயக்க இயக்குனர்களுக்கு அதிகமான ஆர்வம் ஏற்படும் என்று சமுத்திரக்கனி தெரிவித்து வருகிறார். இந்நிலையில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் இன்றைய தினம் சமுத்திரக்கனி சாமி தரிசனம் செய்தார்.

தியானம் செய்த சமுத்திரக்கனி: அம்மனை வழிபாடு செய்த சமுத்திரக்கனி, கருவறை முன்னதாக சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தார். தொடர்ந்து பிரகாரத்தை சுற்றிக் கொண்டு வரும்போது அங்கிருந்த ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு மகிழ்ந்ததை பார்க்க முடிந்தது. அவர்கள் அனைவருடனும் சிறப்பாக சிரித்தபடி உற்சாகமாக போஸ் கொடுத்திருந்தார் சமுத்திரக்கனி. மிகவும் எளிமையான தோற்றத்தில் சாதாரணமான மனிதரை போல அவர் கோயிலில் சாமி தரிசனம் செய்தது ரசிகர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

சமுத்திரக்கனியை பாராட்டிய பாலா: அடுத்ததாக சமுத்திரக்கனி நடிப்பில் ராமம் ராகவம் என்ற படம் தமிழ், தெலுங்கில் உருவாகிவருகிறது. இந்தப் படத்தின் டீசர் வெளியீடு சமீபத்தில் சென்னையில் நடந்தது. அப்பா -மகன் உறவை மையமாக வைத்து 10க்கும் மேற்பட்ட படங்களை கொடுத்துள்ளார் சமுத்திரக்கனி. இந்தப் படத்தின் கதைக்களமும் அப்பா -மகன் உறவை மையமாக கொண்டு உருவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு வெளிச்சம் கிடைக்கும் என்று தான் நம்புவதாக அவர் கூறியுள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய இயக்குநர் பாலா, சமுத்திரக்கனி நடிகராக தன்னை நிரூபித்து விட்டதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X