நீயெல்லாம் ஒரு நடிகனா... நான் நடிகன்னு சொன்னாலே என்னைப் பார்த்து கேலி கிண்டல் செய்றாங்க !

சென்னை: நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் சமுத்திரக்கனி.

பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ள இவருக்கு இப்பொழுது தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது.

எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நான் கடவுள் இல்லை என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ள சமுத்திரக்கனி சினிமாவில் தான் பட்ட கேலி, கிண்டல்கள்,அவமானங்கள் பற்றி பகிர்ந்துள்ளார்.

இரண்டு படங்களும் தோல்வியை

இரண்டு படங்களும் தோல்வியை

தமிழ் சினிமாவில் இப்போது இயக்குனராக கலக்கிக் கொண்டிருக்கும் வெங்கட் பிரபு ஹீரோவாக நடித்த உன்னை சரணடைந்தேன் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் நடிகர் சமுத்திரக்கனி. அதை தொடர்ந்து விஜயகாந்த் ஹீரோவாக நடித்த நெறஞ்ச மனசு என்ற படத்தை இயக்கினார். சமுத்திரக்கனி இயக்கிய இரண்டு படங்களும் தோல்வியை சந்தித்த நிலையில் உதவி இயக்குனராக ராம் மற்றும் அமீர் இயக்கிய சில படங்களில் பணியாற்றி வந்தார்

புரட்சி மிக்க இயக்குனராக

புரட்சி மிக்க இயக்குனராக

5 போராட்டத்திற்குப் பிறகு 2009 ஆம் ஆண்டு வெளியான நாடோடிகள் திரைப்படம் சமுத்திரக்கனிக்கு விஸ்வரூப வெற்றியை கொடுத்தது. நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட நாடோடிகள் தமிழில் பிரம்மாண்ட வெற்றி பெற்றதை தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம், பெங்காலி, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இளைஞர்களை கவரும் வகையில் அப்பா, சாட்டை என சமூக கருத்துக் கொண்ட படங்களையும் இயக்கி தமிழ் சினிமாவில் ஒரு புரட்சி மிக்க இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருந்தார்

தெலுங்கில் மிரட்டும் வில்லனாக

தெலுங்கில் மிரட்டும் வில்லனாக

இயக்குனர்,தயாரிப்பாளர்,நடிகர் என பன்முகங்களைக் கொண்டுள்ள சமுத்திரக்கனிக்கு தெலுங்கு திரைப்படத் துறையிலும் மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது. குறிப்பாக எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்திலும் இடம் பெற்று வருகிறார். தமிழில் அனைவருக்கும் பிடித்த கண்ணியம் மிக்க நடிகராக இருந்தாலும் தெலுங்கில் மிரட்டும் வில்லனாக நடித்து வருகிறார். தெலுங்கில் பீம்லா நாயக், பஞ்சதந்திரம், ஆர் ஆர் ஆர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தமிழில் டான்,இந்தியன்-2,அந்தகன், மாறன் மற்றும் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நான் கடவுள் இல்லை என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

நீயெல்லாம் ஒரு நடிகனா

நீயெல்லாம் ஒரு நடிகனா

இந்த நிலையில் ஆரம்ப கட்டத்தில் சினிமாவில் பட்ட அவமானங்களை பற்றி பகிர்ந்துள்ளார் அதில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த பொழுது மிகவும் ஒல்லியாக இருந்தேன். போதாத குறைக்கு கண்ணாடி வேறு போட்டிருப்பேன் . அப்போது நான் ஒரு நடிகன் என்று சொன்னால் எல்லாரும் கேலி கிண்டல்கள் செய்தார்கள். ஆனால் அதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்படாமல் என்னுடைய நோக்கத்தில் மட்டும் இருந்தேன். இப்போது ஒரு நடிகனாக உங்கள் முன் நிற்கிறேன் என வாழ்க்கையில் தான் பட்ட அவமானங்களை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X