Sandeep Kishan: கேப்டன் மில்லர் படம் ரசிகர்களை அழவைக்கும்.. சந்தீப் கிஷன் உருக்கம்!

சென்னை: நடிகர் தனுஷ் லீட் கேரக்டரில் நடித்துள்ள படம் கேப்டன் மில்லர். திருச்சிற்றம்பலம், வாத்தி படங்களில் கூல் கேரக்டர்களில் நடித்திருந்த தனுஷ், அதிரடியான கேரக்டரில் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் வரும் 12ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதற்கான பிரமோஷகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். படத்தின் ப்ரீ ரிலீஸ், ட்ரெயிலர் ரிலீஸ் என படக்குழுவினர் அடுத்தடுத்த நிகழ்வுகள், அப்டேட்களால் ரசிகர்களை திணறடித்து வருகின்றனர். தற்போது படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய அனுபவத்தை கொடுத்துள்ளது.

பீரியட் படமாக உருவாகியுள்ள கேப்டன் மில்லர்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். படத்தில் தனுஷுடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள கேப்டன் மில்லர் படம் சுதந்திர போராட்ட காலத்தை முன்னெடுக்கும் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்காக நீண்ட தலைமுடி, தாடி, மீசை என நடிகர் தனுஷ் அதிகமாக மெனக்கெட்டுள்ளது தற்போது வெளியாகியுள்ள ட்ரெயிலரில் மிகச்சிறப்பாக காட்டப்பட்டுள்ளது.

Actor Sandeep Kishan hails Captain miller movie and Dhanushs acting

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படம் வரும் 12ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள இந்தப் படத்தின் தணிக்கையும் நிறைவடைந்துள்ளது. படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர், பர்ஸ்ட் லுக், பாடல்கள் வெளியான நிலையில், பாடல்களும் மிகச்சிறப்பான கவனத்தை பெற்றுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

கேப்டன் மில்லர் டிரெயிலர்: இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் டிரெயிலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். உணர்ச்சிப்பூர்வமான பல சம்பவங்களின் தொகுப்பாக இந்த டிரெயிலர் ரசிகர்களை அதிரடியாக கவர்ந்துள்ளது. இந்தப் படத்தின் கதையை தன்னுடைய தோள்களில் அதிகமாக சுமந்து காணப்படுகிறார் தனுஷ். இருந்தபோதிலும் படத்தில் அனைத்து கேரக்டர்களுக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது தற்போது படத்தின் ட்ரெயிலரில் அப்பட்டமாக தெரிகிறது. படம் டிசம்பர் ரிலீசிலிருந்து விலகி தற்போது பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளது. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக இந்தப் படம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

கிளைமாக்சில் 80 குண்டுகள்: இந்நிலையில் இந்தப் படத்தில் 7க்கும் மேற்ப்பட்ட உச்சக்கட்ட தருணங்கள் அமைந்துள்ளதாகவும் இது ரசிகர்களை மிகச்சிறப்பாக கவரும் என்றும் சந்தீஷ் கிஷன் தனது சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். க்ளைமாக்சில் மட்டுமே 800க்கும் மேற்பட்ட ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் 80க்கும் அதிகமான குண்டுகளை பயன்படுத்தியுள்ளதாகவும் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் மிக அதிகமான அளவில் உணர்ச்சிப்பூர்வமாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சில இடங்களில் ரசிகர்கள் அழுவதை தடுக்க முடியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தனுஷின் தைரியம்: இதுபோன்ற படங்களை ஒப்புக் கொள்வதற்கு 90 சதவிகிதம் நடிகர்கள் தயக்கம் காட்டுவார்கள். இத்தகைய கதைகளை எடுப்பதற்கு அதிகப்படியான பட்ஜெட் தேவைப்படுவதே இதற்கு காரணம். ஆனால் தனுஷ் இந்தப்படத்தை ஒப்புக் கொண்டு சிறப்பாக நடித்து முடித்துள்ளார் என்றும் சந்தீப் கிஷன் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் அதிக வன்முறையாக இருந்ததால் தற்போது அவை கட் செய்யப்பட்டுள்ளதாகவும் இதையடுத்தே படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X