கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஹீரோயினுக்கு கன்னா பின்னாவென முத்தம் கொடுப்பது யாருன்னு பாருங்க!
சென்னை: நடிகர் சந்தீப் கிஷன் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தனித்தும் முன்னணி நடிகர்களுடன் இணைந்தும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் நடிகர் தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவான ராயன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பான விமர்சனங்களையும் பெற்றிருந்தார்.
அடுத்ததாக நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யின் படத்தில் இவர் நாயகனாக இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில், படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளதாகவும் விரைவில் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. தெலுங்கிலும் மசாகா என்ற படத்தில் சஞ்சய் கிஷன் நடித்து வருகிறார்.

நடிகர் சந்தீப் கிஷன், நடிகர் சந்தீப் கிஷன் தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவரது தேர்ந்தெடுத்த கேரக்டர்கள் மிகச்சிறப்பாக அமைந்து வருகின்றன. தமிழில் யாருடா மகேஷ் படம் மூலம் என்ட்ரி கொடுத்திருந்த இவர் தொடர்ந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜின் மாநகரம் படத்தில் ஹீரோவாக நடித்து மாஸ் காட்டினார். இதையடுத்து இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தன. நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன், கசடதபற போன்ற படங்களும் இவருக்கு சிறப்பாக அமைந்தன. கடந்த ஆண்டில் நடிகர் தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் ரிலீசான ராயன் படத்தில் லீட் கேரக்டரில் நடித்திருந்தார் சந்தீப்.
ஜேசன் சஞ்சய் -சந்தீப் கிஷன் காம்போ: தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகி வருகின்றன. விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்திலும் இவர் நடித்து வருகிறார். இதன் சூட்டிங் துவங்கியுள்ளதாகவும் விரைவில் படத்தின் மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. தெலுங்கிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் சந்தீப் நடிப்பில் அடுத்ததாக மசாகா படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மசாகா படத்தில் ரிது வர்மா சந்தீப்பிற்கு ஜோடியாகியுள்ளார்.

மசாகா படம்: மேலும் மசாகா படத்தில் ராவ் ரமேஷ், அன்ஷுல் ஆகியோரும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். திரிநாத் ராவ் நக்கினா இயக்கத்தில் உருவாகியுள்ள இநத்ப் படம் வரும் 21ம் தேதி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி மிகச்சிறப்பாக அமைந்த நிலையில் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். படத்தில் அப்பா மற்றும் மகனுக்கு வரும் காதலையொட்டி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.
காதலர் தின வீடியோ: இதனிடையே காதலர் தினக் கொண்டாட்டமாக நடிகர் சந்தீப் கிஷன், ரிது வர்மாவை கிஸ் செய்யும்படியான வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சமீப காலங்களில் யூடியூபில் ட்ரெண்டிங்கில் உள்ள காட்சியை தற்போது படக்குழுவினர் வீடியோவாக மாற்றியுள்ளனர். இதன்படி ரிது வர்மா இழுப்பதாகவும் அவருக்கு கட்டுப்பட்டுவரும் சந்தீப் கிஷன் அவரது கன்னத்தில் முத்தமிடுவதாகவும் இந்த வீடியோவில் காணப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் டீசர் உள்ளிட்டவை மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











