Sandy Master: ஒரு பெரிய சம்பவம் இருக்கு.. தலைவர் 171 படம் குறித்து பேசிய சாண்டி மாஸ்டர்!

சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தில் துவங்கிய தன்னுடைய திரையுலக பயணத்தை அடுத்தடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து தற்போது ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தை இயக்க உள்ளார். இவரது வெற்றிப் பயணம் மிகவும் குறுகியது, ஆனால் மிகப்பெரியது, மாநகரம் மற்றும் கைதி படங்களை ஒரே இரவில் நடப்பது போன்ற கதைகளத்தில் கொண்டு சென்று மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் தற்போது உருவாகவுள்ள ரஜினிகாந்த்தின் தலைவர் 171 படத்தின் கதையும் ஒரே நாளில் நடப்பது போன்ற கதைகளத்தில் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் வரும் 22ம் தேதி படத்தின் டைட்டில் பிரமோ வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் இதுவரை இல்லாதவகையில் ரஜினிகாந்தை வித்தியாசமாக காட்டவுள்ளதாக முன்னதாக பேட்டியொன்றில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். படத்தில் வில்லனாகவும் ஹீரோவாகவும் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாகவும் ஆனால் அவரது கேரக்டர் ஒன்றுதான் என்றும் கூறப்பட்டுள்ளது. நீண்ட காலங்களுக்கு பிறகு இந்தப் படத்தில் மீண்டும் வில்லனாக நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். படத்தின் மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்த அப்டேட் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Sandy master confirms about his joining in Rajinikanth s Thalaivar 171 movie

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ஏழு ஆண்டு திரைப்பயணத்தில் 5 படங்களை மட்டுமே இயக்கி முடித்துள்ளார். தற்போது அடுத்ததாக ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தை இயக்க கமிட் ஆகியுள்ளார். மாநகரம் படத்தில் துவங்கிய இவரது அதிரடி பயணம் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து தற்போது தலைவர் 171 படத்தை வரும் ஜூன் மாதத்தில் துவங்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தின் ஷூட்டிங் முன்னதாக ஏப்ரல் மாதத்திலேயே துவங்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் ஐந்தாறு மாதங்கள் எடுத்துக் கொண்டதாகவும் அதனால் ஜூன் மாதத்தில் தான் படத்தின் சூட்டிங் துவங்கும் என்றும் லோகேஷ் கனகராஜ் தனது பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

தலைவர் 171 படம்: இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்த போஸ்டரில் அதிரடி லுக்கில் ரஜினிகாந்த் காணப்படும் நிலையில் அவரது கைகளில் வாட்ச்களால் போடப்பட்ட விலங்கு காணப்பட்டது. இது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியிருந்தது. படம் டைம் டிராவலையொட்டி உருவாகி வருவதாக கூறப்பட்ட நிலையில் ஒரே நாளில் நடக்கும் கதைக்களத்தை இந்த படம் கொண்டுள்ளதாகவும் அதனால்தான் ரஜினிகாந்த் கைகளில் வாட்ச்கள் காணப்பட்டதாகவும் கமெண்ட்கள் எழுந்தன. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் பிரமோ வரும் 22ம் தேதி வெளியாக உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு லோகேஷ் கணக்கராஜ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

சாண்டி மாஸ்டர்: இதற்கான ப்ரோமோ வீடியோ சூட் அடுத்த வாரத்தில் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சாண்டி மாஸ்டர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் இணைந்து மாஸ் காட்டியுள்ளார். விக்ரம் படத்தில் கமல்ஹாசனின் பத்தல பத்தல பாடலை இவர் கொரியோகிராப் செய்திருந்தார். இந்த பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே ரீச் ஆனது. இந்நிலையில் கடந்த ஆண்டில் வெளியான விஜயின் லியோ படத்தில் இவர் அதிரடி வில்லனாக காட்டப்பட்டிருந்தார். இயக்குனர் மிஷ்கினுடன் இணைந்து கொடூரமான வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

சம்பவம் செய்ய காத்திருக்கும் சாண்டி மாஸ்டர்: சாண்டி மாஸ்டர் நடித்திருந்த இந்த காட்சிகள் படத்தின் துவக்கத்தில் பத்து நிமிடங்களே வந்த போதிலும் இந்த காட்சியை படத்தின் மிக முக்கியமான காட்சிகளாக காணப்பட்டன. இந்த சம்பவம் மூலமாகவே விஜய்யின் சுயம் வில்லன்களுக்கு வெளியாவதாகவும் காட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் தலைவர் 171 படத்தில் சாண்டி மாஸ்டர் நடிகராகவா அல்லது நடன இயக்குனராகவா எப்படி செயல்பட போகிறார் என்பது குறித்து அவரிடம் சமீபத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சாண்டி மாஸ்டர், ஒரு சிறப்பான சம்பவம் காத்திருப்பதாகவும் அது குறித்து விரைவில் தெரியவரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில் தலைவர் 171 படத்தில் சாண்டி மாஸ்டர் இணைவது இதன்மூலம் உறுதியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X