ஏன் உனக்கு வராதா?.. தலைமுடியை இழுத்து.. வாயிலயே அடித்த சங்கீதாவின் கணவர்.. பேட்டியில் பகீர் ஷேரிங்!

சென்னை: நடிகை சங்கீதா, தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் தான் நடித்த படங்களின் மூலம் தனி முத்திரையைப் பதித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். பிதாமகன் படத்தில் விக்ரமை தான் துடைப்பத்தால் அடித்ததால் தான் விக்ரமுக்கு தேசிய விருது கிடைத்தது என விக்ரமிடம் கூறும் ஜாலியான நடிகை. சங்கீதா, கடந்த 2009 ஆம் ஆண்டு திரைப்பட பாடகர் கிரிஷ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர் பேட்டி ஒன்றில் தனது கணவர் தனது முடியை பிடித்து இழுத்து அடித்ததாக தெரிவித்துள்ளார்.

Sangeetha Sangeetha Krish Sangeetha Throwback

நடிகை சங்கீதா, சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும், தமிழ் சினிமா உலகம் அவரை ராசியில்லாத நடிகையாகப் பார்த்தது. ஆனால் தனது திறமை மீது பெரும் நம்பிக்கை கொண்ட, சங்கீதா சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபகாலமாக முன்பு போல் படங்களில் கமிட் ஆகவில்லை என்றாலும், தனக்கு பிடித்த கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

Sangeetha Sangeetha Krish Sangeetha Throwback

சங்கீதா: சிறுவயதில் இருந்து பரதநாட்டியம் உள்ளிட்ட நடனக்கலைகளை முறைப்படி கற்றவர் என்பதால், சின்னத்திரைகளில் பல நடன நிகழ்ச்சிக்கு நடுவராகவும் செயல்பட்டு வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயனின் நடனம் மெருகேறுவதற்கு சங்கீதா முக்கிய பங்கு வகித்தார் என கூறப்படுகிறது. மிகவும் ஜாலியான நடிகையான சங்கீதா, பல தொலைகாட்சிகளுக்கு, பல திரை பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார். பாலாவை இதுவரை பேட்டி எடுத்தவர்களில் சங்கீதாவின் பேட்டி என்பது, தனித்துவமானது என பாராட்டப்படுகிறது.

Sangeetha Sangeetha Krish Sangeetha Throwback

அடி: இப்படியான நிலையில், பேட்டி ஒன்றில் அவர் பேசும்போது, தனது கணவர் கிரிஷ் தன்னை பாட்டுப் பாடச் சொல்லியும் பாட்டு பாடக் கற்றுக் கொடுத்தும் அடிப்பதாக நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசும்போது, " ஒருமுறை எனது கணவர், அது என்ன உனக்கு பாட்டு வராது? நான் உனக்கு கத்துக் கொடுக்குறேன் வா எனக் கூறிவிட்டு, உட்காரவைத்து பாடி, ஒரு கட்டத்திற்கு மேல் அடிக்க ஆரம்பித்து விட்டார். முடியை எல்லாம் பிடித்து, ஏன் பாட்டு வராதா உனக்கு? வாய் மட்டும் நல்லா பேசுற.. தலை முடியை பிடித்துக் கொண்டு, வராது? வராது என வாய்க்கு அருகில் வந்து பட்.. பட்.. பட்டென அடிக்க ஆரம்பித்து விட்டார். என்னை அப்போது அவர் டாமினேட் செய்துவிட்டார்.

Sangeetha Sangeetha Krish Sangeetha Throwback

கொடுமை: கொஞ்ச நேரத்திற்குப் பிறகு, எனது தலைமுடியைப் பிடித்து, தலையை சுவருக்கு அருகில் கொண்டுபோய், இப்போது ஸ்ருதியில பாடுற, இல்லையினா கொன்னுடுவேன்னு சொன்னார். நான் எனக்கு வரல.. என்னை விட்டுடுன்னு சொன்னேன். ரெக்கார்ட் எல்லாம் செய்து என்னை ரொம்பவும் பாடுபடுத்தினார்" என நகைச்சுவையாகவும் சிரித்துக் கொண்டே கூறினார். இதனைப் பார்த்த ரசிகர்கள், சிலர் ஷாக்காகினர். சிலர், சிரித்துவிட்டு, அப்போ கஷ்டமாக இருந்திருக்கும் இப்போ நீங்க சொல்றத கேட்க நல்லா இருக்கு என கமெண்ட் அடித்து வருகின்றனர். மற்றொரு இணையவாசி, இதைக் கேட்டால், சூது கவ்வும் படத்தில் பாபி சிம்ஹாவுக்கு நடப்பதைப் போல உள்ளது என கமெண்ட் அடித்து உள்ளார். சங்கீதாவின் இந்த பழைய பேட்டி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Sangeetha Sangeetha Krish Sangeetha Throwback

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X