என்னோட பலத்தை நான் உணர்ந்த தருணம்... சஞ்சய் தத் பாராட்டு எதுக்குன்னு பாருங்க!

மும்பை : நடிகர் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீணா டன்டன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 14ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து வரும் படம் கேஜிஎப் சாப்டர் 2. இந்தப் படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார் சஞ்சய் தத்.

மிரட்டல் வில்லன் கேரக்டர்

மிரட்டல் வில்லன் கேரக்டர்

ஒரு படத்தின் வெற்றித் தோல்விக்கு சிறப்பான காரணங்களில் ஒன்றாக இருப்பது அதில் நடிக்கும் வில்லன். வில்லன் கதாபாத்திரம் மிரட்டலாக இருந்தால் மட்டுமே, ஹீரோ கேரக்டரின் பலம் படத்தில் சிறப்பாக வெளிப்படும். ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கும் ஹீரோ உட்படுவார்.

கேஜிஎப் சாப்டர் 2

கேஜிஎப் சாப்டர் 2

அந்த வகையில் யஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கேஜிஎப் சாப்டர் 2 படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார் சஞ்சய் தத். அவரது ஆதிரா கேரக்டர் ஹீரோ கேரக்டருக்கு இணையாக படத்தில் அமைந்துள்ளது. பாலிவுட்டில் சிறப்பான ஹீரோவாக வலம்வந்த அவர் தற்போது கேரக்டர் ரோலில் அசத்தி வருகிறார்.

சஞ்சய் தத்தின் கேரக்டர்

சஞ்சய் தத்தின் கேரக்டர்

அந்த வகையில் அவருக்கு ஆதிரா கேரக்டர் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. அவரது நடிப்பை அவர் முழுமையாக வெளிப்படுத்தவும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்தக் கேரக்டரை கொடுத்த படத்தின் இயக்குநர் பிரஷாந்த் நீலுக்கு சஞ்சய் தத் தற்போது நன்றி தெரிவித்துள்ளார்.

உணர்ச்சிப்பூர்வ செய்தி

உணர்ச்சிப்பூர்வ செய்தி

இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் உணர்ச்சிப்பூர்வமான செய்தி ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். ஒருசில நேரங்களில் திரைப்பயணத்தில் சிறப்பான படங்கள் அமைந்துவிடும் அந்த வகையில் கேஜிஎப் சாப்டர் 2 படமும் தனக்கு சிறப்பான படமாக அமைந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Recommended Video

K.G.F: Chapter 2 Review in Tamil | கே ஜி எஃப் 2 விமர்சனம் | Yessa ? Bussa ? | |Yash | Sanjay Dutt
பலத்தை உணர்ந்த தருணம்

பலத்தை உணர்ந்த தருணம்

இந்தப் படம் தனக்கு மிகவும் சிறப்பாக அமைந்ததுடன் தன்னுடைய பலத்தை தான் உணரவும் காரணமாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கேரக்டரின் சிறப்பு அனைத்துமே பிரஷாந்த் நீலையே சேரும் என்றும் அவர் தனது கனவை நனவாக்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X