Leo Villain: லியோ படத்திற்காக வில்லன் சஞ்சய் தத் பெற்ற சம்பளம்.. என்னது இவ்வளவா!
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் சர்வதேச அளவில் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.
இந்தப் படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின் என அடுத்தடுத்த வில்லன்கள் விஜய்யுடன் மோதியுள்ளனர்.

பவர்புல்லான வில்லன்களே சிறப்பான ஹீரோக்களை உருவாக்குவார்கள் என்ற வகையில் ஆக்ஷன் த்ரில்லராக வெளியாகியுள்ள இந்தப் படத்தில் விஜய்யின் வில்லன்கள் மாஸ் காட்டியுள்ளனர்.
லியோ பட வில்லன் சஞ்சய் தத்தின் சம்பள விவரம்: நடிகர் விஜய்யின் லியோ படம் சர்வதேச அளவில் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. படத்தின் ரிலீசுக்காக கடந்த சில மாதங்களாகவே காத்திருந்த ரசிகர்களுக்கு இந்தப் படம் ஸ்வீட் சர்ப்பிரைசை கொடுத்துள்ளது. படம் கலவையான விமர்சனங்களை கொடுத்துள்ள போதிலும் விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். முதல் நாளிலேயே இந்தப் படம் 100 கோடி ரூபாயை சர்வதேச பாக்ஸ் ஆபீசில் கலெக்ட் செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ப்ரீ சேல்சிலேயே 46 கோடி ரூபாய் வசூலை படம் தாண்டியுள்ளதாக ரிப்போர்ட்ஸ் தெரிவிக்கின்றன. அந்த வகையில் இந்தப் படம் கண்டிப்பாக மொத்தத்தில் 1000 கோடி ரூபாய் கலெக்ஷனை அள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, விஜய் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இரண்டாவது படமாக வெளியாகியுள்ள லியோ படம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படம் கண்டிப்பாக இன்டஸ்ட்ரியல் ஹிட்டடிக்கும் என்று அவர்கள் கூறுவதை பார்க்க முடிகிறது.
ஒரு படத்தில் ஹீரோவின் மதிப்பை கூட்டுவதில் வில்லன்களுக்கு மிகவும் சிறப்பான பங்குண்டு. அந்த வகையில் லியோ படத்தில் சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், சாண்டி என அடுத்தடுத்த வில்லன்களுடன் விஜய் அதிரடியாக மோதுவதை ரசிகர்கள் வெகுவாக ரசித்து வருகின்றனர். முந்தைய படங்கள் போல இல்லாமல் இந்தப் படத்தில் அதிகமான வில்லன்களுடன் விஜய் மோதுவது ரசிகர்களை மிகச்சிறப்பாக என்டர்டெயின் செய்து வருகிறது.
அந்த வகையில் இந்தப் படத்தில் அர்ஜூன் மிகப்பெரிய வில்லனாக பார்க்கப்படுகிறார். அவருக்கு இணையாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் இந்தப் படத்தில் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளார். இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி, இந்தப் படத்தில் விஜய்யுடன் மோத அவர் 8 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் தன்னுடைய தோற்றத்தின் மூலமே மிரள வைத்துள்ளார் சஞ்சய் தத். விஜய்யுடனான சஞ்சய் தத்தின் சண்டைக் காட்சிகள் அதிரடி சரவெடியாக ரசிகர்களை கவர்ந்துள்ளன. காலம் காலமாக நாம் பார்த்துவரும் அதே ஹீரோ -வில்லன் கதைதான் என்றாலும் இந்தப் படத்தின் திரைக்கதை, காட்சி அமைப்புகள் மற்றும் கேரக்டர்கள் தேர்வு போன்றவை படத்தின் சிறப்பிற்கு காரணங்களாக அமைந்துள்ளன.


Click it and Unblock the Notifications











