வீட்ல விசேஷங்க.. ‘குட் நியூஸ்’ சொன்ன ‘ராஜா ராணி’ ஜோடி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

நடிகை ஆல்யா கர்ப்பமாக இருப்பதாக அவரது கணவர் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Alya Manasa Pregnant | Sanjeev Latest Tweet | Dancing Stars

சென்னை: ராஜா ராணி சீரியல் புகழ் ஆல்யா மானசா கர்ப்பமாக இருப்பதாக அவரது கணவர் நடிகர் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற ஒரே சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. அந்த சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவிற்கும், ஆல்யாவுக்கும் நிஜமாகவே காதல் உண்டானது. இதனால் அந்த சீரியலில் அவர்களது கெமிஸ்ட்ரி ரசிக்கும்படி இருந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்த சீரியல் முடிவடைந்தது. ராஜா ராணி சீரியல் இரண்டாம் பாகத்திலும் அதே ஜோடி சேர்ந்து நடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ரகசிய திருமணம்

ரகசிய திருமணம்

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கடந்த மே மாதம் ரகசிய திருமணம் செய்து கொண்டனர் ஆல்யாவும், சஞ்சீவும். ஆல்யா வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்காததால் ரகசியத் திருமணம் செய்து கொண்டதாக சமீபத்தில் அறிவித்தனர். அதன் தொடர்ச்சியாக நண்பர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சியும் கொடுத்தனர்.

வெறித்தனம்

வெறித்தனம்

இந்நிலையில் விஜய் டிவி நட்சத்திரக் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் ஆல்யாவும், சஞ்சீவும் கலந்து கொண்டனர். அதில் பிகில் படத்தில் வரும் வெறித்தனம் பாடலுக்கு சஞ்சீவ் நடனம் ஆடினார். பின்னர் மக்கள் மத்தியில் மேடையில் அவர் பேசினார்.

ஆல்யா கர்ப்பம்

ஆல்யா கர்ப்பம்

அப்போது தனது மனைவி ஆல்யா கர்ப்பமாக இருப்பதாக அவர் அறிவித்தார். இந்தத் தகவலைக் கேட்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சமூகவலைதளங்களிலும் ஆல்யா - சஞ்சீவ் தம்பதிக்கு அவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ராஜாவுக்கும், ராணிக்கும் இளவரசன் பிறக்கப் போகிறான் என அவர்கள் கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர்.

காற்றின் மொழி

காற்றின் மொழி

ராஜா ராணி சீரியலைத் தொடர்ந்து சஞ்சீவ் தற்போது விஜய் டிவியில் காற்றின் மொழி என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆல்யா ராஜா ராணி சீரியலுக்குப் பிறகு வேறு எந்த சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X