Vijay: விஜய் பெரிய கார் பிரியர்.. ஓட்டினா பறக்கும்.. ரகசியம் பகிர்ந்த பிரபல நடிகர்!
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரியில் வாரிசு படம் வெளியான நிலையில், ஒரே ஆண்டில் அடுத்த மாதம் லியோ படமும் வெளியாகவுள்ளது.
விஜய்யின் நடிப்பில் வருடத்திற்கு ஒரு படம்தான் அதிகமாக வெளியாகும். ஆனால் இந்த ஆண்டில் அடுத்தடுத்து இரு படங்கள் வெளியாகவுள்ளது அவரது ரசிகர்களை அதிகமான உற்சாகத்திற்கு உட்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அடுத்த மாதத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் கமிட்டாகியுள்ள தளபதி 68 படத்தின் சூட்டிங்கும் துவங்கவுள்ளது. விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் உருவாகி வருவதும் அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தீயை கொடுத்து வருகிறது.

விஜய் பெரிய கார் பிரியர் என வெளிப்படுத்திய நடிகர் சஞ்சீவ்: நடிகர் விஜய் சிறுவனாக இருந்தபோதே சினிமாவில் தன்னுடைய பயணத்தை துவங்கியவர். தன்னுடைய அப்பா எஸ்ஏசி இயக்கத்தில் வெளியான படங்களில் அவர் நடித்துள்ளார். தொடர்ந்து நாளைய தீர்ப்பு படம் மூலம் அறிமுகமான விஜய், தொடர்ந்து பல்வேறு அவமானங்களை திரைத்துறையில் சந்தித்ததாக எப்போதும் பகிர்வார். அதையெல்லாம் தாண்டி தற்போது சாதனை நாயகனாக வெற்றிநடை போட்டு வருகிறார் விஜய்.
அவரது லியோ படம் அடுத்ததாக ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன்கள் மிகப்பெரிய அளவில் திட்டமிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெளிநாட்டில் தன்னுடைய விடுமுறை கொண்டாட்டத்தை மேற்கொண்டிருந்த விஜய் தற்போது சென்னை திரும்பியுள்ளார். இதையடுத்து லியோ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மேலும் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். படத்தின் வசூல் 1000 கோடி ரூபாய்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கேற்ப ப்ரமோஷன்களையும் படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து விஜய்யின் தளபதி 68 படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது படத்தின் முன்தயாரிப்பு பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளது. மேலும் படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வும் ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ள நிலையில், அவருக்கு சினேகா மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் ஜோடியாகியுள்ளனர். மேலும் படத்தில் பிரபுதேவா, பிரஷாந்த் உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடிக்க கமிட்டாகியுள்ளனர்.
இந்த இரு படங்களும் அடுத்தடுத்து பான் இந்தியா படங்களாகவே வெளியாகவுள்ளன. விஜய்க்கு சர்வதேச அளவில் ஏராளமான வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். இதை தற்போது லண்டனில் துவங்கப்பட்ட லியோ படத்தின் டிக்கெட் புக்கிங் வெளிப்படுத்தியுள்ளது. டிக்கெட் புக்கிங் 6 வாரங்களுக்கு முன்னதாகவே துவங்கப்பட்ட நிலையில், 24 மணிநேரத்திற்குள்ளாகவே படத்தின் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.
இந்நிலையில் விஜய் குறித்து அவரது நண்பர் சஞ்சீவின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டும் பார்க்கப்பட்டும் வருகிறது. விஜய்யின் ஆரம்ப கால படங்களில் இவர் அதிகமாக காணப்பட்ட நிலையில், சமீபத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு இணைந்திருந்தார். இந்நிலையில் விஜய் பெரிய அளவில் கார் பிரியர் என்ற உண்மையை இவர் தனது பேட்டியொன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

விஜய் எப்போதுமே மற்றவர்களுடன் அதிகமாக கலகலப்பாக பேச மாட்டார். இவரது நண்பர்கள் வட்டமும் மிகவும் சிறியது. ஆனால் படத்தில் நடிக்கும்போது வேறு மாதிரியான விஜய்யை பார்க்க முடியும். அந்தக் கதைக்கு தேவையான கலகலப்பை அவர் தந்து விடுவார். இந்நிலையில் விஜய்க்கு அதிகமான கார்கள் மீது பிரியம் அதிகம் என்றும் முதலில் பிரீமியர் 118 காரில் துவங்கி தற்போது வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் வரை அவர் மிகுந்த விருப்பத்துடன் வாங்கியதாகவும் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.
கார்களை ஓட்டுவதிலும் மிகவும் திறமையாக பயணிப்பவர் விஜய் என்றும் ஒரு இடத்தில் மிக விரைவில் செல்ல வேண்டும் என்றால் அதிகமான ஸ்பீடில் அவர் காரை தெறிக்க விடுவார் என்றும் கூறியுள்ள சஞ்சீவ், ஆனாலும் தன்னுடைய நிதானத்தை அவர் எப்போதுமே விட்டதில்லை என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் காரில், சஞ்சீவ், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் உள்ளிட்டவர்கள் பயணம் செய்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அந்தப் படத்தின் ரிலீசின்போது சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது.


Click it and Unblock the Notifications