சிங்கப்பூரையே மிஞ்சும் தமிழ்நாடு... முதல்வர் விஜயை புகழ்ந்த சஞ்சீவ்!
சென்னை: இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்நாடு சிங்கப்பூர் மாதிரி மாறினாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை என என முதலமைச்சர் விஜயின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சஞ்சீவ் பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் முதல்வர் விஜய் பெயரிலான காய்கறி மற்றும் பழங்களால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட சிற்பத் திருவிழா நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சி குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் பேசிய அவர், நான் விஜயின் நண்பராக பேசவில்லை, தமிழ் நாட்டின் ஒரு பிரஜையாக பேசுகிறேன். எப்படி சினிமாவில் ஒரு ட்ரெண்ட்செட்டராக இருந்தாரோ, எத்தனையோ தடைகளை உடைத்து, எத்தனையோ துறைகளை உடைத்துதான் அவர் அந்த லெவலுக்கு வந்தார். அது உங்களுக்கே நன்றாக தெரியும். நான் யாரை சொல்கிறேன் என்று உங்கள் ஒவ்வொருவருக்குமே நன்றாக தெரியும்.

நடிகர் சஞ்சீவ்: அங்கே சாதிக்க தெரிஞ்சவருக்கு, இங்கே சாதிக்கத் தெரியா? அங்கே ஜெயிக்க தெரிஞ்சவருக்கு இங்கே ஜெயிக்க தெரியாதா? அங்கே தடைகளை உடைக்க தெரிஞ்சவருக்கு இங்கே தடைகளை உடைக்க தெரியாதா? அங்கே எதிர்பார்ப்புகளை சமாளிக்க தெரிஞ்சவருக்கு இங்கே எதிர்பார்ப்புகளை சமாளிக்க தெரியாதா? எல்லாம் ஒன்றுதான். ஆனால், இங்கே கொஞ்சம் அதிகமாக உழைக்க வேண்டும். அதையும் சமாளித்து வருவார் ஜெயிப்பார் என்கிற நம்பிக்கை ஒரு தமிழ்நாட்டு பிரஜையா, முதலமைச்சரின் நண்பனாக எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
சிங்கப்பூராக மாறும்: அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சி குறித்து பேசிய அவர், "இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்நாடு சிங்கப்பூர் மாதிரி மாறினாலும் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. அந்த அளவுக்கு மருத்துவ வசதி, கல்வி மற்றும் பாதுகாப்பு துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். சிங்கப்பூரில் மக்கள் எந்த பயமும் இல்லாமல் வெளியே செல்லும் சூழல் உள்ளது. ஏதாவது தவறு நடந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதுபோல பாதுகாப்பான, முன்னேறிய மற்றும் சந்தோஷமான தமிழ்நாட்டை நான் பார்க்கிறேன். அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்" என சஞ்சீவ் உருக்கமாக பேசியுள்ளார். இதற்கு ஆதரவாகவும் எதிர்பார்ப்பகவும் இணையத்தில் சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications