Don't Miss!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்தீட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சிரிக்க வையுங்கன்னா.. கிச்சுகிச்சு மூட்டியா சிரிக்க வைக்க முடியும்.. பேசவிட்டாதான.. சந்தானம் பொளேர்!
சென்னை: என்ன பேசினாலும் பிரச்சனை பண்ணா எப்படி காமெடி பண்ண முடியும் என நடிகர் சந்தானம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாளைய இயக்குரில் பங்கேற்ற இயக்குநர் ஜான்சன் இயக்கியிருக்கும் படம் அக்யூஸ்ட் நம்பர் ஒன். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் நடிகர் சந்தானம் ,எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிராமின் வீட்டு பெண்னை லோக்கல் பையன் ஒருவர் காதலிப்பதே படத்தின் கதை.
காமெடிக்கு கட்டுப்பாடுகள்
இந்த படத்தின் பிரஸ்மீட் இன்று சென்னையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற சந்தானம் காமெடிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து பேசினார்.
பெரிதாக்கி பிரச்சனை
பாலிவுட் ஹாலிவுட் படங்களில் எல்லாம் தன் இஷ்டத்துக்கு காமெடி செய்கிறார்கள். தமிழ் சினிமாவில், தான் ஏதாவது ஒன்று பேசினாலே அதை மீடியாக்கள் பெரிதாக்கி பிரச்சனை செய்துவிடுகின்றனர்.
என்ன பேசினாலும்
தமிழ் சினிமாவை பொருத்த வரை காமெடிக்கு பெரும் போட்டி உள்ளது. ஆனால் காமெடிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. என்ன பேசினாலும் செய்தாலும் அது பிரச்சனையாகி விடுகிறது.
கிச்சு கிச்சு மூட்டியா?
இப்படி இருந்தால் எப்படி காமெடி செய்ய முடியும்? சிரிக்க வையுங்கள் சிரிக்க வையுங்கள் என்றால், எதுவும் பேசாமால் செய்யாமல் எப்படி சிரிக்க வைக்க முடியும்? தியேட்டரில் போய் உட்கார்ந்து படம் பார்ப்பவர்களின் அக்கிளில் கையை விட்டு கிச்சுகிச்சு செய்துதான் சிரிக்க வைக்க முடியும்.
ரெஸ்ட்ரிக்ஷன் வேண்டாம்
வேலையில்லாதவர்கள் ஏதாவது குறையை கண்டுபிடித்து கூறுவார்கள். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கமெடியை பார்த்து கேட்டு ரசிக்க வேண்டடும், கமெடிக்கு ரெஸ்ட்ரிக்ஷன் போட்டால் சிரிக்க வைப்பது கடினம். இவ்வாறு நடிகர் சந்தானம் தெரிவித்தார்..