ஹீரோ.. காமெடியன்.. வில்லன்.. ஒரே படத்தில் 3 கேரக்டர்.. அசத்தும் சந்தானம்

Recommended Video

A1 Press Meet - Santhanam Emotional Speech | Santhanam | சிம்புவுக்கு ரொம்ப நன்றி- சந்தானம்

சென்னை: நடிகர் சந்தானம் அடுத்து நடிக்கவுள்ள படத்தில் மூன்று கதாப்பாத்திரங்களில் அசத்தவுள்ளார்.

தமிழ் சினிமாவை பொறுத்த வரை காமெடி நடிகர்கள் ஹீரோவாவது ஒன்றும் புதிதல்ல. நாகேஷ், சந்திர பாபு, விவேக், வடிவேலு, அப்புக் குட்டி, சந்தானம், யோகி பாபு என்று பலரை அடுக்கிக் கொண்டே போகலாம்.

Actor Santhanam doing three roles in his next movie


இதில் சந்தானம் தன்னுடைய ப்ளஸ்ஸான காமெடியை சரியாக பயன்படுத்தி வெற்றிகரமாகவே பயணித்து வருகிறார். தான் பிடித்த இடத்தை தக்க வைக்க புது முயற்சி ஒன்றை எடுத்துள்ளார் சந்தானம். அடுத்து கையெழுத்திட்டுள்ள படம் ஒரு சயின்டிபிக் ஃபிக்‌ஷன் படம்,. அதில் அவர் ஒன்றல்ல, மூன்று வேடங்களில் நடிக்கிறார். கதையின் நாயகனும் இவரே, காமெடியனும் இவரே. வில்லனும் இவரே.

இது குறித்து அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி கூறுகையில், “நான் ஸ்கிரிப்டை எழுதியபோது, ஹீரோவின் வேடத்திற்கு நகைச்சுவை, காதல் மற்றும் இன்னும் சில அப்பாவித்தனங்களைக் கொண்டிருக்கக்கூடிய ஒருவரை விரும்பினேன், அதற்கு சந்தனம்தான் பொருத்தமானவர் என்று உணர்ந்தேன். ஸ்கிரிப்டுடன் நான் அவரை அணுகியபோது, முதலில் ஒரு லைனரை விவரிக்கும்படி அவர் என்னிடம் கேட்டார். அதுவே அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. உடனடியாக படத்தில் கையெழுத்திட்டார் செய்தார். இப்படம் ஒரு அறிவியல், நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும் என தெரிவித்தார்.

இவர் மாநகரம் படத்திற்கு வசனம் எழுதியது குறிப்பிடத்தக்கது. பலூன் படத்தில் அசோசியேட்டாகவும் பணியாற்றியுள்ளார். மேலும், சந்தனத்தின் கதாபாத்திரங்களைப் பற்றிய விவரங்களை வெளியிட தயங்கிய கார்த்திக், ஹீரோ, வில்லன் மற்றும் நகைச்சுவை என 3 வேடங்களையும் சந்தானமே ஏற்றுள்ளதாக மட்டும் கூறுகிறார்.

வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பது போல் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். நவம்பர் முதல் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள படப்பிடிப்பு தொடங்கவுள்ளது”

சந்தானத்தை காமெடியனாகவும் ஹீரோவாகவும் பார்த்து விட்டோம். வில்லனாக சந்தானம் எப்படி மிரட்டுகிறார் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X