Actor Santhanam: ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்.. கோலிவுட்டில் அடுத்த அவதாரத்திற்கு தயாராகும் சந்தானம்!

சென்னை: நடிகர் சந்தானம் நடிப்பில் அடுத்தடுத்து வடக்குப்பட்டி ராமசாமி, இங்க நான் தான் கிங்கு ஆகிய படங்கள் வெளியாகி அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் தற்போது தில்லுக்கு துட்டு 2 படத்தில் நடித்து வருகிறார் சந்தானம். இந்த படத்தை தொடர்ந்து யாமிருக்க பயமேன் பட இயக்குநர் டிகே டைரக்ஷனில் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார்.,

இந்த படங்களை முடித்துவிட்டு அடுத்ததாக சந்தானம் கோலிவுட்டில் புதிய அவதாரத்தை எடுக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான வேலைகளில் தற்போது அவர் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. காமெடியனாக மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சந்தானத்திற்கு ஹீரோ கெட்டப் கைக்கொடுக்காத நிலையில், அடுத்த முயற்சியில் களமிறங்கவுள்ளார்.

santhanam tamil cinema dhilluku dhuddu 2 2

நடிகர் சந்தானம்: நடிகர் சந்தானம் தொலைக்காட்சியில் மாஸாக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்பு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது/ இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சந்தானம். அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி கலாட்டா செய்தார்/ இவரது கால்ஷீட்டிற்காகவே முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் காத்திருந்த சம்பவங்களும் நிகழ்ந்தன. ஒரு கட்டத்தில் இனிமே இப்படித்தான் என்று ஹீரோவாக களமிறங்கிய சந்தானம், அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் இவற்றில் பல படங்களை அவரே தயாரித்தும் வருகிறார்.

இயக்குநராகும் சந்தானம்: இந்நிலையில் தற்போது அடுத்ததாக அவர் இயக்குநர் அவதாரம் எடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை அவரே இயக்கி நடிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான ஸ்கிரிப்ட் ஒர்க்கை தற்போது மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது தில்லுக்கு துட்டு 2 படத்தில் நடித்தவரும் சந்தானம் விரைவில் இந்தப்படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்யவுள்ளார். இந்த படத்தை தொடர்ந்து யாமிருக்க பயமேன் பட இயக்குநர் டிகே இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படங்களை முடித்துவிட்டு அடுத்ததாக இயக்குநராக களமிறங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தில்லுக்கு துட்டு 2 படம்: சமீபத்தில் திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றிருந்தார் சந்தானம். அப்போது அவரை பார்க்க ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் காட்டினர். தில்லுக்கு துட்டு 2 படத்தின் வெற்றிக்காக வேண்டிக் கொள்வதற்காக திருப்பதி வந்ததாக சந்தானம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் இயக்குநரானால் அந்தப் படம் காமெடி ஜானரில் இருக்குமா அல்லது மாறுபட்ட கதைக்களத்தில் தன்னுடைய படத்தை அவர் இயக்குவாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இயக்குநராகும் அடுத்தடுத்த நடிகர்கள்: தொலைக்காட்சியில் ஆங்கராக தன்னுடைய பயணத்தை துவங்கிய சந்தானம், அடுத்ததாக காமெடியனாகவும் தற்போது ஹீரோவாகவும் நடித்து வரும் சூழலில் அடுத்ததாக இயக்குநராகவும் திட்டமிட்டுள்ளார். நடிகர்கள் அடுத்தடுத்து இயக்குநராகவும் மாறி வருவது தற்போது ட்ரெண்டாகியுள்ளது. இந்த வரிசையில் சிம்பு, தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் ஏற்கனவே டைரக்ஷனை செய்துள்ள நிலையில் அடுத்ததாக ஜெயம் ரவியும் புதிய படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த பட்டியலில் தற்போது சந்தானமும் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X