Santhanam: காமெடியனாக நடிப்பேன்.. அடுத்தடுத்து கார்த்தி, ஆர்யாவுடன் இணையும் சந்தானம்!
சென்னை: நடிகர் சந்தானம் அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் காமெடி கேரக்டர்களில் இணைந்து கலக்கியவர்.
ஒருகட்டத்தில் ஹீரோவாக தன்னுடைய திரைப்பயணத்தை மாற்றியமைத்த சந்தானம், தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களை தன்னுடைய தயாரிப்பிலும் மற்ற தயாரிப்புகளிலும் கொடுத்துவந்தார்.
அடுத்ததாக அவரது நடிப்பில் டிடி ரிட்டர்ன்ஸ் படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையொட்டிய பிரமோஷன்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

மீண்டும் காமெடியனாக களமிறங்கும் சந்தானம்: நடிகர் சந்தானம் சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு தாவியவர்களின் மிகவும் முக்கியமானவர். விஜய் டிவியின் காமெடி ஷோக்களில் இவர் அதிகமான ரசிகர்களை கவர்ந்தவர். இந்த நிகழ்ச்சிகள் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. சிம்புவுடன் சந்தானம் இணைந்து நடித்திருந்த மன்மதன் படம் இவருக்கு சிறப்பான என்ட்ரியை கொடுத்தது. தொடர்ந்து விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து அதிகமான ரசிகர்களை ஈர்த்தார்.
சந்தானத்தின் டைமிங் காமெடி மற்றும் பாடி லேங்குவேஜ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அவர் ஒரு கட்டத்தில் ஹீரோவாக தன்னுடைய கவனத்தை செலுத்தியபோதிலும், அவரது காமெடி தொடர்ந்து ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட்டாக அமைந்து வருகிறது. ஹீரோவாக சில படங்களில் நடித்திருந்தாலும் சந்தானத்திற்கு அவை அனைத்தும் சொல்லிக்கொள்ளும் வகையில் அமையவில்லை. தன்னுடைய சொந்த தயாரிப்பிலும் மற்றவர்கள் தயாரிப்பிலும் ஹீரோவாக சந்தானம் நடித்துள்ளார்.
இந்நிலையில் அடுத்ததாக டிடி ரிட்டர்ன்ஸ் என்ற படம் சந்தானம் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படம் வித்தியாசமான பேய் படமாக வெளியாகவுள்ளதாக சந்தானம் கூறியுள்ளார். கோவையில் இந்தப் படத்திற்கான பிரமோஷனையொட்டி பேட்டியளித்த அவர், இந்தப் படம் ஹாரர் காமெடி படமாக அமைந்துள்ளதாகவும் இந்தப் படம் வெற்றியடைந்தால் தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.
தற்போது நாயகனாக நடித்து வருவதாகவும் கதாநாயகனா காமெடியனா என்று என்னிடம் கேள்வி எழுப்பினால், இட்லி வேண்டுமா தோசை வேண்டுமா என்பது போல இருப்பதாகவும் கூறிய சந்தானம், காமெடியனாக இருந்தபோது எந்தவிதமான கவலையும் இல்லாமல் இருந்ததாகவும் தற்போது ஹீரோவாக நடிப்பதால் உடலை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் காமெடி கேரக்டர்களில் தான் நடிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் அடுத்ததாக தான் கார்த்தி மற்றும் ஆர்யாவுடன் இணையவுள்ளதாக சந்தானம் கூறியுள்ளார். சிறுத்தை போன்ற காம்பினேஷனில் மீண்டும் இணைய கார்த்தி கேட்டுள்ளதாகவும் இதேபோல பாஸ் என்கிற பாஸ்கரன் 2 படத்திலும் ஆர்யாவுடன் மீண்டும் தான் இணையவுள்ளதாகவும் சந்தானம் கூறியுள்ளார். இதற்கான வேலைகளில் படத்தின் இயக்குநர் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











