பெரிய தாடியுடன் சந்தானத்தின் நியூ லுக்.. வைரலாகும் புகைப்படம் !
சென்னை : முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த நடிகர் சந்தானம் இப்போது பல்வேறு திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வெற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார்.
Recommended Video
பிரபலமான டிவி காமெடி நிகழ்ச்சியான லொள்ளு சபாவில் தொடங்கிய இவரது நடிப்பு வாழ்க்கை இப்பொழுது திரையுலகில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது.
நகைச்சுவை நடிகராக இவர் உச்சத்தில் இருந்தபோதே, ட்ராக்கை மாற்றி இப்பொழுது ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் சந்தானம் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில் இப்பொழுது பெரிய தாடி மற்றும் நீண்ட முடியுடன் அட்டகாசமான புது லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்களை மிரள வைத்து வைரலாகி வருகிறது.

லீட் ரோலில்
மன்மதன், சச்சின் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களை காமெடி நடிகராக தோன்றிய நடிகர் சந்தானம், ஃபேண்டசி இயக்குனர் சிம்புதேவன் இயக்கிய அறை எண் 305ல் கடவுள் என்ற திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்து இருந்தார்.

கவுண்டர் பஞ்ச்களின்
இயக்குனர் ராஜேஷ் இயக்குனராக அறிமுகமான சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் ஜீவாவுடன் இணைந்து காமெடியில் கலக்கி இருந்த சந்தானம், தனித்துவமான கவுண்டர் பஞ்ச்களின் மூலம் அடுத்தடுத்த திரைப்படங்களில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார்.

அதிலும் வெற்றி
பாஸ் என்கிற பாஸ்கரன், சிறுத்தை, ஒரு கல் ஒரு கண்ணாடி என இவர் நடித்த படங்களில் காமெடி காட்சிகளுக்காகவே படம் ஏகபோகமாக ஓடி மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் தன்னுடைய மார்க்கெட்டை அறிந்துகொண்ட சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தை தனது சொந்த தயாரிப்பில் தயாரித்து நடித்தும் வெளியிட்டு அதிலும் வெற்றி கண்டார்.

ஆக்சன் கதாநாயகனாக
இவ்வாறு படிப்படியாக காமெடி கதாபாத்திரங்களில் இருந்து தற்போது
ஆக்சன் கதாநாயகனாக உருவெடுத்திருக்கும் நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அசால்ட் செய்து
காமெடி காட்சிகளில் தான் ஒரு சிறந்தவர் என நிரூபித்த சந்தானம் இப்பொழுது ஆக்சன் காட்சிகளிலும் பட்டைய கிளப்பி, காமெடி, நடிப்பு, நடனம் என அனைத்திலும் அசால்ட் செய்துவருகிறார்.

நியூ லுக்
மேலும் சந்தானம் நடிக்கும் திரைப்படங்களின் தலைப்புகளும் தொடர்ந்து மிக வித்தியாசமாகவே இருந்து வருகிறது. தில்லுக்குதுட்டு, டக்கால்டி, ஏ1, பிஸ்கோத்து என மிக வித்தியாசமான பெயர்களைக் கொண்ட திரைப்படங்களில் கதாநாயகன் கதாபாத்திரங்களில் அதே சமயத்தில் காமெடியிலும் கலக்கி வரும் சந்தானத்தின் நியூ லுக் ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது

டோட்டலாக மாறிப்போன
பெரிய தாடி, நீண்ட தலைமுடி, கண்ணைப் பறிக்கும் கலர்ஃபுல் கூலிங் கிளாஸ் என அப்படியே டோட்டலாக மாறிப்போனவாறு இருக்கும் சந்தானத்தின் இந்த நியூ லூக் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் "நம்ம சாண்டா வா இது!!" என மிரண்டு போய், ஒருவேளை அடுத்த படத்துக்கான நியூ லுக்கா இருக்குமோ என சந்தேகிக்கும் நிலையில் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











