ஏ1 வெற்றி... வித்தைக்காரனாக அவதாரம் எடுத்த நடிகர் சந்தானம்
சென்னை: சமீபத்தில் வெளியான ஏ1 படம் வணிக ரீதியாக வெற்றி பெற்று நல்ல வசூலை அளித்தது. இந்த சூட்டோடு நடிகர் சந்தானம் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்குவார் என்று சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
நடிகர் சந்தானம் காமெடி ட்ராக்கிலிருந்து ஹீரோ ட்ராக்கிற்கு மாறியதில் இருந்து தொடர்ச்சியாக படங்களை கொடுத்து வருகிறார். படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் கவலைப்படாமல் அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக நடிப்பதோடு சொந்தமாகவும் படங்களை தயாரித்து வருகிறார்.

நடிகர் சந்தானம் கடைசியாக அறிமுக இயக்குனர் ஜான்சனின் ஏ 1 திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் வணிக ரீதியாக மிகவும் சிறப்பாக திரையில் ஓடியது. நடிகர் சந்தானம் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் கண்ணன் இயக்கவுள்ளார். இவரது முந்திய திரைப்படமானது பூமராங் மற்றும் இவன் தந்திரன் படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இப்படம் கிராமப்புற பின்னணியில் அமைக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு முன்பு தமிழ்நாட்டின் அம்பசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி மற்றும் திருநெல்வேலி நகரங்களில் படமாக்கப்படும் என்றும் இயக்குனர் கண்ணன் தெரிவித்திருந்தார். இந்த திரைப்படத்திற்காக பிரபல அதிரடி ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவிடமிருந்து நடிகர் சந்தானம் சிலம்பம் பயிற்சி பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இப்போது, எங்களின் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் படி, இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 3ஆவது வாரத்தில் தொடங்கி 45 நாட்களுக்கு தொடரும் என்று எங்களுக்குத் தெரியவந்துள்ளது. மேலும், திரைப்படத்தின் தலைப்பு வித்தைக்காரன் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
இதற்கிடையில், இயக்குனர் கண்ணன் நடிகர் அதர்வா மற்றும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஆகியோரை முன்னணி கதாபாத்திரங்களாக வைத்து ஒரு திரைப்படம் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்துள்ளது. மறுபுறம், இயக்குனர் விஜய் ஆனந்தின் டகால்டி மற்றும் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது சர்வர் சுந்தரம் திரைப்பட வெளியீட்டுக்காக நடிகர் சந்தானம் காத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











