அலப்பறை மன்னன் சந்தானம் பிறந்த நாள் இன்று...பெஸ்ட் காமெடி டயலாக் ரீவைண்ட்!

சென்னை : நகைச்சுவை மன்னன் என்று பெயர் எடுத்த சந்தானம் இன்று தனது 43வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள்,நண்பர்கள், திரைப்பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளுசபா நிகழ்ச்சியின் மூலம், மக்களை வயிறு வலிக்க சிரிக்கவைத்தவர் நடிகர் சந்தானம். இந்த நிகழ்ச்சியின் மூலம், இவர் பட்டி தொட்டி எங்கும் இவர் பிரபலமானார்.

இவரின் காமெடித் திறனை வெளியில் கொண்டு வந்த நடிகர் சிம்பு,மன்மதன் படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாக இன்று ஹீரோவாக கலக்கி வருகிறார்.

நடிகர் சந்தானம்

நடிகர் சந்தானம்

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள். ஆனால், நம்மில் பலர் வாய்விட்டு சிரிப்பதே இல்லை. வேலைபளு, மன அழுத்தம் போன்றவற்றால் துவண்டுபோயி மருந்து, மாத்திரைகள், மருத்துவமனை என அலைந்த திரிந்து கொண்டு இருக்கிறார்கள். அப்படி பட்டவர்களுக்கு அருமருந்தாக இருக்கிறார் சந்தானம்.

பஞ்ச் வசனங்கள்

பஞ்ச் வசனங்கள்

நக்கல் பேச்சு, நையாண்டி, டைமிங்கில் ரைமிங் என இயல்பான உடல்மொழி மூலம் ரசிகர்களை கவர்ந்தார். காமெடியில் ரசிகர்களை மகிழ்வித்து வந்த சந்தானம் இப்போது, ஹீரோவாக நடித்து வருவதால் அவருடைய காமெடியை திரையில் ரசிகர்களால் பார்க்க முடியவில்லை. இருந்தாலும், இவர் பேசிய பல பஞ்ச் வசனங்கள் தற்போது வரை டிரெண்டிங்கில் உள்ளது.

ஒரு கல் ஒரு கண்ணாடி

ஒரு கல் ஒரு கண்ணாடி

உதயநிதி ஸ்டாலின் சந்தானம் இணைந்து நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தை எப்போதும் பார்த்தாலும் சிரிப்பை அடக்க முடியாது அந்த படத்தில் அனைவரையும் வயிறுவலிக்க சிரிக்க வைத்து இருப்பார். குறிப்பாக அட தேன் அடை என்பதும், டேய் ரொம்ப ஆடாத டா இராணுவத்துல அழிஞ்சவங்களை விட ஆணவத்துல அழிஞ்சவங்க தான் அதிகம் என்பது இப்போதும் டிரெண்டிங்தான்.

காமெடி அலப்பறை

காமெடி அலப்பறை

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவும் சந்தானமும் கொடுக்குற அலப்பறைக்கு அளவே இருக்காது. ஊருல பத்து பதினஞ்சு பிரண்டு வச்சுருக்கவெல்லாம் சந்தோசமா இருக்கான், ஒரே ஒரு பிரண்டு வச்சுட்டு நான் படுற அவஸ்தை இருக்கே... ஐய்யோ யோ யோ..என்ற வசனமும், அந்த சரஸ்வதி தேவியே உனக்கு பதிலா பரீட்சை எழுதினாலும் நீ பாஸ் ஆக மாட்ட என்பது செம.

43வது பிறந்த நாள்

43வது பிறந்த நாள்

அதேபோல, என்றென்றும் புன்னகை படத்தில் ஜீவா, வினய், சந்தானம் ஒவ்வொரு சீனிலும் சிரிக்கவைத்து இருப்பார்கள், மொக்க காமெடிக்கே சிரிக்குது ஈசியா உஷார் ஆகிடும் போல என இன்னும் பல காமெடி வசனங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இன்று 43வது பிறந்த நாளை கொண்டாடும் சந்தானத்திற்கு அவரது ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்தை கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X