சந்தானமே அலற விடுவார்.. இதுல யோகிபாபு வேற.. சொல்லவா வேணும்.. மிரட்டிருக்காங்க.. கொண்டாடும் ஃபேன்ஸ்!
Recommended Video
சென்னை: டகால்டி படம் ரிலீஸாகியுள்ள நிலையில் சந்தானத்தின் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் செந்தில், கவுண்டமணி, வடிவேலு, விவேக் உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்களை தொடர்ந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சந்தானம். டைமிங்கில் அவர் பேசும் டயலாக்குகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதனால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார் நடிகர் சந்தானம். முன்னணி நடிகர்கள் பலருடனும் இணைந்து நடித்துள்ளார் சந்தானம்.

வெற்றி படங்கள்
நகைச்சுவை நடிகராக அசத்தி அலுத்துப்போன சந்தானம் அண்மைக்காலமாக ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடித்து வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இனிமே இப்படிதான், சக்க போடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2. அக்யூஸ்ட் நம்பர் ஒன் ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளன.

எகிறிய எதிர்பார்ப்பு
அந்த வரிசையில் நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம் டகால்டி. இந்தப் படத்தை இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விஜய் ஆனந்தன் இயக்கியுள்ளார். இதில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து யோகி பாபுவும் நடித்திருக்கிறார். இருவரும் நகைச்சுவை நடிகர்களாக கொடிக்கட்டி பறப்பவர்கள் என்பதால் படத்தின் எதிர்பார்ப்பு எகிறியது.

இன்று ரிலீஸ்
இந்நிலையில் டகால்டி படம் இன்று வெளியாகியுள்ளது. ஆக்ஷன், காதல், காமெடி என எல்லாம் கலந்த கலவையாக உள்ளது இந்த படம். இதில் அறிமுக நாயகி ரித்திகா சென், சந்தானத்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். சந்தானத்தின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஹேண்ட்மேட் பிலிம்ஸ் மற்றும் எஸ்.பி.சௌத்ரியின் 18 ரீல்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது.

டைமிங் கவுண்டர்கள்
இந்நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தின் ஒவ்வொரு காட்சியும் பட்டையை கிளப்பும் வகையில் உள்ளதாக கூறியுள்ளனர் ரசிகர்கள். குறிப்பாக படத்தில் சந்தானம் பேசும் ஒற்றை வரி டைமிங் கவுண்டர்கள் அதிர வைக்கிறது என்கின்றனர். சந்தானம் ஒரு பக்கம் மிரட்ட தன் பங்குக்கு யோகி பாபுவும் சேர்ந்து அலற விட்டுள்ளாராம்.

கல்லா கட்டும்
டகால்டி படத்திற்கு வந்தால் சிரிப்புக்கு கேரண்டி என கூறியுள்ள ரசிகர்கள், படத்தில் காமெடிக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை என புகழ்ந்து தள்ளியுள்ளனர். ரசிகர்களின் பாசிட்டிவான விமர்சனங்களால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது. படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பால் வாரக் கடைசியான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் டகால்டி படம் நிச்சயம் கல்லாக்கட்டும் என்றும் பேச்சு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











