Actor Santhanam :வெற்றிப் படத்தின் 3வது பாகத்திற்கு திட்டமிடும் சந்தானம்.. விரைவில் அறிவிப்பு!
சென்னை : நடிகர் சந்தானம் சின்னத்திரையில் இருந்த சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர்களில் மிகவும் முக்கியமானவராக கருதப்படுகிறார்.
துவக்கத்தில் காமெடியனாக களமிறங்கி, ஹீரோக்களுக்கு இணையாக நடித்துவந்த சந்தானம், ஒரு கட்டத்தில் ஹீரோவாகவே நடித்து வருகிறார்.
தில்லுக்கு துட்டு, ஏ1, இனிமே இப்படித்தான் உள்ளிட்ட படங்களில் இவர் ஹீரோவாக நடித்துள்ள நிலையில் சமீபத்தில் இவருக்கு ஹீரோவாக நடிக்கும் படங்கள் கைக்கொடுக்கவில்லை.

சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 3 : நடிகர் சந்தானம் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதன்மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். ஒருகட்டத்தில் இந்த நிகழ்ச்சிகள் கொடுத்த பிரபலத்தால் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க, அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார் சந்தானம். டைமிங் காமெடி மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் ஹீரோக்களுக்கு இணையான கேரக்டர்களில் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் ஒரு காலகட்டத்தில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின்மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்திருந்தார். பாக்கியராஜின் படத்தின் ரீமேக்காக வெளியான இந்தப் படம் மிகச்சிறந்த வெற்றியை சந்தானத்திற்கு கொடுத்தது. தயாரிப்பாளராகவும் இந்தப் படத்தில் அவர் மிகச்சிறந்த வெற்றியை பெற்றார். இந்தப் படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் நகைச்சுவை இழையோடியிருந்தது.

இந்தப் படத்தை தொடர்ந்து நாயகனாகவே தொடர்ந்து நடிப்பது என்று தீர்மானித்து, ஏ1, இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2, பாரிஸ் ஜெயராஜ் என அடுத்தடுத்த படங்களில் நாயகனாகவே களமிறங்கினார் சந்தானம். இந்நிலையில் சமீப காலங்களில் வெளியான சந்தானத்தின் படங்கள் எதுவும் அவருக்கு கைக்கொடுக்கவில்லை. இதையடுத்து தன்னுடைய கேரியரில் சிறப்பான வெற்றியை கொடுத்த தில்லுக்கு துட்டு படத்தின் மூன்றாவது பாகத்தை எடுக்க சந்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காமெடி ஹாரர் ஜானரில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் சந்தானத்திற்கு மிகச்சிறந்த அளவில் கைக்கொடுத்தது. படத்தில் அவரது ஹீரோயிசமும் எடுப்பட்டது. இந்நிலையில் இந்தப படத்தின் மூன்றாவது பாகம் குறித்து இன்றைய தினம் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகி சிறப்பான வெற்றியை பெற்ற நிலையிலேயே படத்தின் மூன்றாவது பாகம் குறித்து தகவல்கள் வெளியாகின.

தில்லுக்கு துட்டு படத்தின் முதல் பாகம் கடந்த 2016ம் ஆண்டில் வெளியான நிலையில், இரண்டாவது பாகம் கடந்த 2019ம் ஆண்டில் வெளியாகி வெற்றியை கொடுத்தது. இதையடுத்து மூன்றாவது பாகம் 3டியில் உருவாகவுள்ளதாக அப்போதே தகவல்கள் வெளியாகின. ஆனால் சந்தானத்தின் அடுத்தடுத்த பிராஜக்ட்கள் காரணமாக இந்தப் படம் பேச்சுவார்த்தை அளவிலேயே நின்றுப் போனது. இந்நிலையில் தற்போது மீண்டும் இந்தப் படம் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











