அடுத்த காமெடி ஆக்‌ஷனுக்கு ரெடியான சந்தானம்... சென்னையில் தொடங்கியது ஷூட்டிங்!

By

சென்னை: சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் சென்னையில் இன்று தொடங்கியுள்ளது.

காமெடியனாக நடித்து வந்த சந்தானம், இப்போது ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடித்து கடந்த ஜனவரி மாதம் டகால்டி படம் வெளியானது.

இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்து, அவர் நடித்துள்ள சர்வர் சுந்தரம் படம் வெளியாவதாக இருந்தது.

ரிலீஸ் ஆகவில்லை

ரிலீஸ் ஆகவில்லை

இதை ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். வைபவி சாண்டில்யா ஹீரோயினாக நடித்துள்ளார். பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், ராதாரவி, செஃப் தாமோதரன் உட்பட பலர் நடித்துள்ளனர். கெனன்யா பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். தமிழர்கள் உணவின் மேன்மையை சொல்லும் கதையை கொண்ட இந்தப் படம், சில காரணங்களால் ரிலீஸ் ஆகவில்லை.

பிஸ்கோத்

பிஸ்கோத்

இதையடுத்தும், பிஸ்கோத் என்ற படத்தில் நடித்துள்ளார். இதை ஆர்.கண்ணன் இயக்கி உள்ளார். சந்தானம் ஜோடியாக, தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பாலா ஆகியோர் நடித்துள்ளனர். தாரா அலிஷா பெர்ரி, 'ஏ 1' படத்தில் சந்தானம் ஜோடியாக ஏற்கனவே நடித்து இருந்தார். மற்றும் சவுகார் ஜானகி, ஆனந்தராஜ், ராஜேந்திரன், ஆடுகளம் நரேன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

டிக்கிலோனா

டிக்கிலோனா

அடுத்து அவர் நடிப்பில் 'டிக்கிலோனா' படம் வெளியாக இருக்கிறது. இதை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் தயாரிப்பாளர் சினிஸும் தயாரிக்கின்றனர். இதில் சந்தானம் 3 கேரக்டர்களில் நடிக்கிறார். அவர் ஜோடியாக நடிகைகள் அனைகா, ஷிரின் நடித்துள்ளனர். முக்கியமான கேரக்டரில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்துள்ளார்.

அனைகா ஜோடி

அனைகா ஜோடி

இதை அடுத்து சந்தானம் நடிக்கும் படத்தை, 'ஏ 1' பட இயக்குனர் ஜான்சன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ஆர்தர் கே.வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார். சந்தானம் ஜோடியாக, அனைகா நடிக்கிறார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாகிறது. லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக கே.குமார் படத்தைத் தயாரிக்கிறார்.

காமெடி ஆக்‌ஷன்

காமெடி ஆக்‌ஷன்

இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் இன்று தொடங்கியது. காமெடியுடன் கூடிய ஆக்‌ஷன் படமாம் இது. ஜான்சன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான ‘A1' படம், கவனிக்கப்பட்டது. இதன் காமெடி காட்சிகளும், வசனங்களும் ரசிகர்களால் பாராட்டப்பட்டன. இந்தப் படமும் அப்படி இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X