சந்தானத்தின் படத்திற்கு யூ சான்றிதழ்... அடுத்த மாதம் 19ம் தேதி ரிலீஸ்?

சென்னை : நடிகர் சந்தானத்தின் அடுத்த படம் சபாபதி. இந்தப் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

படத்தில் திக்குவாயால் பாதிக்கப்பட்டவராக வருகிறார் சந்தானம்.

இந்தப் படத்திற்கு தற்போது யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.

நடிகர் சந்தானம்

நடிகர் சந்தானம்

நடிகர் சந்தானத்தின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் டிக்கிலோனா. கொரோனா காரணமாக இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போன நிலையில் கடந்த மாதம் 10ம் தேதி படம் ரிலீசானது. டைம் டிராவலை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.

சபாபதி படம்

சபாபதி படம்

இதையடுத்து தற்போது சந்தானத்தின் நடிப்பில் வெளியாக உள்ள படம் சபாபதி. இந்தப் படத்தின் பாடல் ஒன்றை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். பொம்மைகளை கொண்டு இந்தப் பாடல் உருவாகியிருந்தது. ஆயுதபூஜைடியொடடி இந்தப்பாடல் சிறப்பான வரவேற்பை பெற்றது.

ப்ரீத்தி வர்மா நாயகி

ப்ரீத்தி வர்மா நாயகி

முழுநேர கதாநாயகனாக மாறியுள்ள சந்தானம் தொடர்ந்து தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார். குறிப்பாக காமெடியை மையமாக கொண்டு இவர் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சபாபதி படத்தில் ப்ரீத்தி வர்மா நாயகியாக ஜோடி சேர்ந்துள்ளார்.

திக்குவாய் இளைஞன்

திக்குவாய் இளைஞன்

படத்தை சீனிவாசராவ் இயக்கியுள்ளார். படத்தில் சாயாஜி ஷிண்டே, எம்எஸ் பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் டிவி புகழ் சுவாமிநாதன், காமெடி பஜார் மாறன் ஆகியோரும் படத்தில் உள்ளனர். சபாபதி படத்தில் திக்குவாய் கொண்ட இளைஞனாக சந்தானம் நடித்துள்ளார்.

அப்பா -மகன் உறவு

அப்பா -மகன் உறவு

மேலும் இந்தப் படத்தில் அப்பா -மகன் உறவு சிறப்பாக பேசப்பட்டுள்ளது. சாம் சிஎஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆர்கே எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ரமேஷ்குமார் படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில் படத்திற்கு தற்போது யூ சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

19ம் தேதி ரிலீஸ்?

19ம் தேதி ரிலீஸ்?

காமெடி மற்றும் குடும்ப சென்டிமெண்ட்டில் உருவாகியுள்ள இந்தப்படம் அடுத்த மாதம் 19ம் தேதி ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. படத்தின் சாட்டிலைட் உரிமையை கலர்ஸ் தமிழ் கைப்பற்றியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X