போராளிகளை இழிவுப்படுத்துகிறாரா சந்தானம்? சபாபதி பட போஸ்டரால் வெடித்த சர்ச்சை!

சென்னை: சந்தானம் நடித்துள்ள சபாபதி படத்தின் போஸ்டருக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சந்தானம். ரஜினி, அஜித், விஜய், சூர்யா, தனுஷ், ஆர்யா, சிம்பு, ஜெயம் ரவி, உதயநிதி ஸ்டாலின் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

சந்தானத்தின் காமெடிக்கு என்றே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் சந்தானம்.

சபாபதி படம்

சபாபதி படம்

சமீபத்தில் சந்தானம் நடிப்பில் டிக்கிலோனா படம் வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் 'சபாபதி'. அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் இயக்கி உள்ள இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, 'குக் வித் கோமாளி' புகழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

19ஆம் தேதி ரிலீஸ்

19ஆம் தேதி ரிலீஸ்

இந்தப் படம் வரும் 19 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதையொட்டி இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. விஜய் டிவி பிரபலம் புகழ் மற்றும் சந்தானம் இடம் பெற்றுள்ள அந்த போஸ்டர் சர்ச்சையில் சிக்கி உள்ளது.

சிறுநீர் கழிக்கும் சந்தானம்

சிறுநீர் கழிக்கும் சந்தானம்

அதாவது 'தண்ணீர் திறந்துவிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம், திரண்டு வாரீர்' என சுவர் மீது எழுதப்பட்டுள்ளது. அந்த சுவரின் மீது சந்தானம் சிறுநீர் கழிப்பது போன்ற காட்சியுடன் அந்த போஸ்டர் உள்ளது. இதனால் இந்த போஸ்டருக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

போராளிகளை இழிவுப்படுத்தும் சந்தானம்

போராளிகளை இழிவுப்படுத்தும் சந்தானம்

அந்த வகையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், சபாபதி படத்தின் போஸ்டர் போராளிகளை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விளம்பரத்தை நடிகர் சந்தானம் திரும்பப் பெற வேண்டும் என்றும் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

போராட்டம் நடத்துவோம் - எச்சரிக்கை

போராட்டம் நடத்துவோம் - எச்சரிக்கை

அப்படி செய்யாவிட்டால் தண்ணீருக்காக போராடுகின்ற மக்களோடு சபாபதி திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகள் முன் போராட்டம் நடத்துவோம் என அவர் எச்சரித்துள்ளார். நடிகர் சந்தானத்தின் சர்ச்சைக்குரிய போஸ்டரால் சபாபதி படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X