லோக்கல் சேனலில் விஜேவாக வேலை பார்த்த நடிகர் சந்தானம்.. தீயாய் பரவும் வீடியோ!

சென்னை: நடிகர் சந்தானம் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு லோக்கல் சேனல் ஒன்றில் விஜேவாக வேலை பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் மட்டுமின்றி ஹீரோவாகவும் உள்ளார். எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் திரைத்துறைக்கு வந்தார் சந்தானம்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.

ரசிகர் பட்டாளம்

ரசிகர் பட்டாளம்

காதல் அழிவதில்லை, அலை உள்ளிட்ட சில படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். பின்னர் 2004ஆம் ஆண்டு வெளியான சிம்புவின் மன்மதன் படத்தில் ஹீரோவுக்கு நண்பராக காமெடி கேரக்டரில் நடித்தார் சிம்பு. அதனை தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

பட்டைய கிளப்பியிருப்பார்

பட்டைய கிளப்பியிருப்பார்

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, கண்ணா லட்டு தின்ன ஆசையா, தீயா வேலை செய்யனும் குமாரு, என்றென்றும் புன்னகை, உனக்கும் எனக்கும், ராஜா ராணி, ஐ, பொல்லாதவன், வாமனன், கண்டேன் காதலை, சிறுத்தை, தெய்வ திருமகள் உள்ளிட்ட பல படங்களில் காமெடி கதாப்பாத்திரத்தில் பட்டைய கிளப்பியிருப்பார்.

ஹீரோவான சந்தானம்

ஹீரோவான சந்தானம்

ஆல் இன் ஆல் அழகு ராஜா, அரண்மனை, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, நண்பேண்டா ஆகிய படங்களிலும் அவரது காமெடி ரசிக்க வைத்தது. அதனை தொடர்ந்து இனிமே இப்படிதான், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு, டகால்டி, ஏ1 உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் சந்தானம்.

விஜேவாக சந்தானம்

விஜேவாக சந்தானம்

தயாரிப்பாளராகவும் உள்ளார் நடிகர் சந்தானம். இந்நிலையில் நடிகர் சந்தானம் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு லோக்கல் சேனல் ஒன்றில் விஜேவாக பணியாற்றியது தெரிய வந்துள்ளது. நடிகர் சந்தானம் லோக்கல் சேனலில் காலர் ஒருவரிடம் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

கேலி செய்த சந்தானம்

அந்த வீடியோவில் நடிகர் சந்தானம் பார்ப்பதற்கு மிகவும் இளமையாக உள்ளார். அப்போது சந்தானத்திடம் பேசும் காலர், அவரை ஹீரோவாக்க விரும்புவதாக கூறுகிறார். இதனைக் கேட்டு, நீங்க நல்லா இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா, என்னை போய் ஹீரோவா போட்டு படம் எடுக்குறேன்ங்றீங்க என கேட்டு கேலி செய்கிறார் சந்தானம்.

கடின உழைப்புக்கான பலன்

கடின உழைப்புக்கான பலன்

இந்த வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் பின்னர் சினிமாவில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார் சந்தானம். பேக் டு பேக் ஹிட் கொடுத்து தற்போது முழுநேர ஹீரோவாக உள்ளார். சினிமாவில் சந்தானத்தின் வளர்ச்சி அவரது கடின உழைப்பு மற்றும் சினிமா மீதான ஈடுபாட்டுக்கு கிடைத்த பலன்.

Recommended Video

Singam Puli Neelu Aunty யார் தெரியுமா? | Adhavan, Siruthai
மூன்று வேடங்கள்

மூன்று வேடங்கள்

தற்போது கார்த்திக் யோகி இயக்கும் 'டிக்கிலோனா' படத்தில் நடித்து வருகிறார் சந்தானம். இந்த படத்தில் முதன்முறையாக சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார். ஹீரோ, வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகராக நடிக்கிறார். படத்தின் மூன்று வெவ்வேறு போஸ்டர்கள் கடந்த மாதம் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X