கண்ணீருடன் நண்பனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்.. பெசன்ட்நகரில் தகனம் செய்யப்பட்டது சேதுவின் உடல்!

சென்னை: நடிகர் சேதுராமனின் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட்டது.

Recommended Video

Dr. Sethu Raman No More | Dermatologist | Actor

கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா, சக்கப்போடு போடு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகர் சேதுராமன். அண்ணாமலை பல்கலைக கழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் எம்டி முடித்துள்ளார் சேதுராமன்.

சந்தானத்தின் நெருங்கிய நண்பரான சேது ராமன், அவருடன் இணைந்து மூன்று படங்களில் நடித்துள்ளார். சினிமாவை தாண்டியும் அவர்களுக்குள் ஆழமான அழகான நட்பு இருந்து வந்தது.

முழு நேர பணி

முழு நேர பணி

தோல் மருத்துவ நிபுணரான நடிகர் சேது, சென்னை அண்ணாநகரில் Zi Clinic என்கிற தோல் சிறப்பு மருத்துவமனையை நடத்தி வந்தார். விரைவில் ஈசிஆரிலும் தோல் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையை தொடங்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். சினிமாவில் நடித்தாலும் மருத்துவ பணியை முழு நேர பணியாக கொண்டிருந்தார் சேது.

காப்பாற்ற முடியவில்லை

காப்பாற்ற முடியவில்லை

திரைத்துறையை சேர்ந்த பலரும் அவரிடம் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு திடீரென சேது ராமனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குடும்பத்தினர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சேதுராமனின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

மனைவி மகள்

மனைவி மகள்

நேற்றிரவே அவரது உயிர் பிரிந்துவிட்டது. 36 வயதான சேது ராமனுக்கு கடந்த 2016ஆம் ஆண்டுதான் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆகி இன்னும் 4 ஆண்டுகள் கூட முழுமையாக நிறைவடையவில்லை. சேதுராமானுக்கு உமையாள் என்ற மனைவியும் 2 வயதுக்குள்ளான மகளும் உள்ளனர்.

குஷ்பு உருக்கம்

குஷ்பு உருக்கம்

சேதுராமனின் உலகம் அவரது மகள்தான் என்று கூறப்படுகிறது. சேதுராமனிடம் வழக்கமாக சிகிச்சை பெறும் நடிகை குஷ்புவும் தனது உருக்கமான டிவிட்டில் இதையே தெரிவித்துள்ளார். அவருடைய மகள் அவருடன்தான் எப்போதும் கிளினிக்கில் இருப்பார் என்றும் குஷ்பு தனது டிவிட்டில் தெரிவித்திருந்தார். அதோடு அவரது மனைவியும் ஒரு அப்பாவி என்று கூறியிருந்தார்.

திரும்பி வரமாட்டாயா?

திரும்பி வரமாட்டாயா?

இன்ஸ்டாகிராமிலும் உருக்கமாக பதிவிட்டிருந்தார் குஷ்பு. நீ எங்கள் இதயங்களை நொறுக்கிவிட்டு சென்றிருக்கிறாய் சேது. ஏன் இவ்வளவு சீக்கிரமாக சென்றாய்? பிறரை காட்டிலும் நல்ல உள்ளங்கள் ஏன் வேகமாக இந்த பூமியைவிட்டு செல்கின்றன? உன்னுடைய அமைதியான குணத்தையும் உன் அழகான சிரிப்பையும் நான் நிச்சயம் மிஸ் செய்வேன். நீ திரும்பி வர மாட்டாயா என்று நினைக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

பலரும் இரங்கல்

பலரும் இரங்கல்

மருத்துவரான சேதுராமன் 36 வயதில் மரணமடைந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுக்க ஊரடங்கு அமலில் இருப்பதால், திரைத்துறையினர் அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாமல் போனது. இருப்பினும் பலரும் சமூக வலைதளங்களில் சேதுராமனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

கண்ணீருடன் சுமந்து..

கண்ணீருடன் சுமந்து..

இந்நிலையில் சேதுராமனின் உடல் இன்று பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அதற்கு முன்பாக சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள அவரது வீட்டிலேயே இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன. பின்னர் பெசன்ட்நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடலை நடிகர் சந்தானம் கண்ணீர்விட்டப்படியே சுமந்து சென்றார்.

அதிர்ச்சியில்..

அதிர்ச்சியில்..

சேதுராமனின் நெருங்கிய நண்பரான சந்தானம் ட்விட்டரில், என் உயிர் நண்பன் சேதுவின் மரணத்தால் தான் அதிர்ச்சியில் உறைந்திருப்பாதகவும், அவருடைய ஆன்மா நிம்மதியடைய பிரார்த்திப்பதாகவும் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.

கண்களிர் கண்ணீர்

கண்களிர் கண்ணீர்

சேது மரணமடைந்த செய்தியை கேட்டு அவரது வீட்டிற்கு சென்ற சந்தானம் நண்பனின் உடல் தகனம் செய்யப்படும் வரை உடன் இருந்துள்ளார். கண்களில் கண்ணீரும் முகம் முழுக்க துயரம் சூழ்ந்தப்படி சந்தானம் நிற்கும் போட்டோக்களும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X