நடிகர் சந்தானம் நடித்துள்ள "சபாபதி" படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி வெளியானது!

சென்னை: நடிகர் சந்தானம் தொடர்ந்து காமெடி படங்களில் நடித்து வரும் அனைத்து படங்களும் தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது

அந்த வகையில் கடைசியாக வெளியான டிக்கிலோனா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் சந்தானத்தின் நடிப்பில் உருவாகி நீண்ட காலமாக வெளியிட முடியாமல் கிடப்பில் கிடந்த சபாபதி திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

முன்னணி நடிகர்களுக்கு சவால் விடும்

முன்னணி நடிகர்களுக்கு சவால் விடும்

நடிகர் சந்தானம் காமெடியனாக திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும் இப்பொழுது கதாநாயகனாக முன்னணி நடிகர்களுக்கு சவால் விடும் அளவிற்கு திரைப்படங்களை தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்து வருகிறார்.அந்த வகையில் சந்தானத்தின் வித்தியாசமான நடிப்பில் கடைசியாக வெளியான டிக்கிலோனா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படம் பாராட்டுகளை பெற்றது.

சபாபதி

சபாபதி

முதல் முறையாக சந்தானம் மூன்று வேடங்களில் கலக்கிய டிக்கிலோனா வெற்றியைத் தொடர்ந்து சந்தானம் நடிப்பில் உருவாகி நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த சபாபதி திரைப்படம் அடுத்ததாக வெளியாக உள்ளது. இயக்குனர் சீனிவாசராவ் இயக்கத்தில் சந்தானம் திக்குவாயால் பாதிக்கப்பட்டவராக நடித்துள்ள இந்த திரைப்படமும் முழுக்க முழுக்க காமெடி கதை களத்தில் உருவாகி உள்ளது. கதாநாயகியாக ப்ரீத்தி வர்மா நடித்திருக்க இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி இசை அமைத்துள்ளார்.

தந்தை - மகன் இடையேயான உறவை

தந்தை - மகன் இடையேயான உறவை

கடந்த ஆண்டு ரிலீசுக்கு தயாரான இந்த திரைப்படம் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வெளியிட முடியாமல் கிடப்பில் போடப்படுவது. இந்த நிலையில் ஒரு வழியாக படக்குழு படத்தை வெளியிட தயாராகி உள்ளது அந்த வகையில் சபாபதி வரும் நவம்பர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. சபாபதி படத்திலிருந்து பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. காமெடி மற்றும் குடும்ப சென்டிமென்ட்டில் உருவாகியுள்ள இப்படம் தந்தை - மகன் இடையேயான உறவை அழகாக பேச இருக்கிறது.

ட்ரைலர் நவம்பர் 10

ட்ரைலர் நவம்பர் 10

ஆர் கே என்டர்டெயின்மென்ட் சார்பில் சி ரமேஷ் குமார் தயாரிப்பில் சீனிவாசராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சாயாஜி ஷிண்டே, எம்.எஸ்.பாஸ்கர், விஜய் டிவி புகழ் சுவாமிநாதன், காமெடி பஜார் மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் சபாபதி ட்ரைலர் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது அதன்படி சபாபதி படத்தின் ட்ரைலர் வரும் நவம்பர் 10ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X