திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சந்தானம்.. ரசிகரிடம் திருப்பதி லட்டை கேட்டு வாங்கியிருக்காரே!
திருப்பதி: நடிகர் சந்தானம் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்கு வந்தவர்களில் முதன்மையானவராக பார்க்கப்படுகிறார். சினிமாவில் காமெடியனாகவே இவரது பயணம் துவங்கியது. ஏறக்குறைய முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து சந்தானம் நடித்துள்ள நிலையில், ஹீரோவிற்கு இணையாகவே இவரது கேரக்டர்கள் அமைந்தன.
ஒரு கட்டத்தில் இனிமே இப்படித்தான் என்று ஹீரோவாக தன்னுடைய பாதையை மாற்றினார் சந்தானம். அறை என் 305ல் கடவுள் படத்தின்மூலம் ஹீரோவாக மாறிய சந்தானம் தொடர்ந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா, டிடி ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்கள் மூலம் கவனத்தை பெற்றுள்ளார். அடுத்ததாக டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

நடிகர் சந்தானம்: நடிகர் சந்தானம் விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். இந்த நிகழ்ச்சி கொடுத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வீட்டுக் கதவை தட்டியது. சிம்புவின் மன்மதன் படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த நடிகர்களின் படங்களில் இணைந்து காமெடி கலாட்டா செய்தார். ஹீரோக்களுக்கு இணையான கேரக்டர்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஹீரோக்கள், இயக்குநர்கள் என அனைவரும் சந்தானத்தின் கால்ஷீட்டிற்காக காத்திருந்த காலம் உண்டு. அந்த அளவிற்கு தான் எடுத்துக் கொள்ளும் கேரக்டரை மிகச்சிறப்பாக்கி விடுவார் சந்தானம்.
ஹீரோவாக மாறிய சந்தானம்: இவரது டைமிங் காமெடி மற்றும் பாடி லேங்குவேஜ் மிகப்பெரிய அளவில் வொர்க் அவுட் ஆனது. இதனிடையே அறை எண் 305ல் கடவுள் படம் மூலம் ஹீரோவாக மாறிய சந்தானம், தொடர்ந்து மல்ட்டி ஹீரோ சப்ஜெக்ட்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஒருகட்டத்தில் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று களமிறங்கினார். காமெடியனாக இருந்தபோது அவரது படங்களின் வெற்றியை தொடர்ந்து உறுதி செய்த சந்தானத்திற்கு ஹீரோவாக வெற்றி, தோல்வி என மாறி மாறி வந்தவண்ணம் உள்ளன. விஜய், அஜித், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள சந்தானம், முன்னணி ஹீரோகவும் தயாரிப்பாளராகவும் அதிரடி காட்டி வருகிறார்.
திருப்பதியில் சாமி தரிசனம்: இந்நிலையில் இன்றைய தினம் நடிகர் சந்தானம் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். கோயிலில் இருந்து வெளியே வரும் அவரது வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவர் தன்னுடைய உதவியாளர்கள் மற்றும் ரசிகர்களுடன் இணைந்து வெளியில் வருவதாக காணப்படுகிறது. அப்போது அவரது ரசிகர் ஒருவரிடம் பேசும் சந்தானம், ஒரு கட்டத்தில் அவரது கையில் இருக்கும் திருப்பதி லட்டை சுட்டிக் காட்ட அவர் உடனடியாக சந்தானத்திடம் அந்த லட்டை கொடுப்பதாக காணப்படுகிறது. தான் வாங்கிக் கொள்கிறேன் என்று சந்தானம் கூறிய போதிலும் மிகுதியான அன்பால் அவர் கையில் அந்த ரசிகர் லட்டை திணிப்பதாக காணப்பட்டது.
டிடி ரிட்டர்ன்ஸ் 2 குறித்து சந்தானம்: இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சந்தானம், மிகச்சிறப்பாக சாமி தரிசனம் செய்ததாக கூறியுள்ளார். அடிக்கடி வருவதுதான் என்றும் அடுத்ததாக தன்னுடைய நடிப்பில் உருவாகிவரும் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் அடுத்த பாகம் நல்லபடியாக உருவாகி சிறப்பான வெற்றியை பெற வேண்டும் என்று வேண்டியதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டில் சந்தானம் நடிப்பில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் படம் மிகச்சிறப்பான வெற்றியை பெற்ற நிலையில், தற்போது அதன் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. முதல்கட்டமாக பிரம்மாண்டமான சொகுசு கப்பல் ஒன்றில் இந்தப்படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது.


Click it and Unblock the Notifications











