DD Returns: பாக்ஸ் ஆபீஸ் வசூலில் பட்டையை கிளப்பும் டிடி ரிட்டர்ன்ஸ்.. சந்தானம் மாஸ் கம்பேக்!

சென்னை: நடிகர் சந்தானம் லீட் கேரக்டரில் நடித்துக் கடந்த 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது டிடி ரிட்டர்ன்ஸ்.

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் காமெடி ஹாரர் படமாக வெளியாகியுள்ள இந்தப் படத்தில் சந்தானத்துடன் சுரபி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

முதல் நாளிலிருந்தே வசூல் மற்றும் விமர்சனரிதீயாக டிடி ரிட்டர்ன்ஸ் படம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

Actor Santhanams DD Returns collects more than 6 crores in just two days

வசூலில் சாதனை செய்துவரும் சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ்: நடிகர் சந்தானம் சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர்களில் மிகவும் முக்கியமானவர். விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் காமெடி செய்துவந்த இவர் சிம்புவின் மன்மதன் படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்து முன்னணி நடிகர்களுடன் கூட்டணி அமைத்து அதகளம் செய்தவர். தன்னுடைய டைமிங் காமெடி மற்றும் உடல்மொழிகளில் அனைத்து விதமான ரசிகர்களையும் கவர்ந்து காமெடி கிங்காக இருந்தார் சந்தானம்.

அந்த நேரத்தில் தான் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன், இந்த அமெரிக்க மாப்பிள்ளை இதெல்லாம் வேண்டாம், இனிமே இப்படித்தான் என்று அதிரடி முடிவெடுத்தார். இவரது இந்த முடிவால் சிலகாலம் காமெடி கலாட்டாகளுக்கு ஆளில்லாமல் தவிக்கத்தான் செய்தது தமிழ் சினிமா. ஆனாலும் சூரி, சதீஷ் இவர்களையெல்லாம் களமிறக்கி அழகு பார்த்தது. இவர்களுக்கும் இப்போது ஹீரோ ஆசை வந்தது வேறு விஷயம்.

சந்தானம் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடத்துள்ளார். குறிப்பாக அவரது தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2 ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படங்கள். இந்நிலையில் இதன் அடுத்த பாகமாக டிடி ரிட்டர்ன்ஸ் படம் கடந்த 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. காமெடி ஹாரர் படமாக உருவாகியுள்ள டிடி ரிட்டர்ன்ஸ் வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் இந்தப் படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.

பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாகியுள்ளார் சுரபி. மேலும் மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோரும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். முந்தைய படங்கள் இரண்டும் சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், டிடி ரிட்டர்ன்ஸ் படமும் மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கியது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்தப் படம் சிறப்பாக பூர்த்தி செய்துள்ளது. முதல் நாளிலிருந்தே இந்தப் படம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த இரு தினங்களில் இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. கடந்த இரு தினங்களில் இந்தப் படம் சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் வசூலில் 6 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. சந்தானத்திற்கு கடந்த சில படங்கள் சிறப்பாக கைக்கொடுக்காத நிலையில், தற்போது டிடி ரிட்டர்ன்ஸ் மூலம் தன்னுடைய ரிட்டர்னையும் சந்தானம் சிறப்பாக்கியுள்ளார். அவரது படங்கள் சரியாக ஓடாமல் இருந்த நிலையில், மீண்டும் காமெடியில் இறங்க முடிவு செய்துள்ள சந்தானத்திற்கு இந்தப்படம் சிறப்பான கம்பேக்கை கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X