DD Returns box office: விட்ட இடத்தை பிடித்த சந்தானம்..வசூல் மழையில் நனைந்த டிடி ரிட்டர்ன்ஸ்!

சென்னை: சந்தானம் நடிப்பில் வெளியாகி உள்ள டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் மூன்றாம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சந்தானம் படங்கள் என்றாலே நகைச்சுவை அதிகமிருக்கும் என்றெண்ணிய காலம் உண்டு. ஆனால், அவர் எப்போது ஹீரோவாக மாறினாரோ அப்போதே அந்த நகைச்சுவை காணாமல் போய்விட்டது.

சந்தானம் திரையில் வந்தாலே சிரிக்க ரெடியான ரசிகர்களுக்கு அவர் ஹீரோவாக மாறியது ஏமாற்றத்தை தந்தது.

Actor Santhanams DD Returns third day box office collection

காமெடி மிஸ்லிங்: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், ஏ1, தில்லுக்கு துட்டு 1 படங்கள் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. ஆனால், அதன்பின் வந்த பிஸ்கோத்து, குளு குளு, ஏஜென்ட் கண்ணாயிரம், டிக்கிலோனா போன்ற படங்களில் சந்தானத்தின் ஸ்பெஷல் காமெடி மிஸ்ஸானதால் ரசிகர்கள் அவர் மீது அதிருப்தியில் இருந்தனர். ஹீரோவா நீங்க நடிச்சது போதும் என்று வெளிப்படையாகவே பேசத் தொடங்கினர்.

தில்லுக்கு துட்டு1: அப்படி கவலையில் இருந்த சந்தானம் ரசிகர்களின் கவலையை போக்கும் வகையில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் டிடி ரிட்டர்ன்ஸ். வழக்கமாக பேய் படம் என்றாலே ரசிகர்கள் பயத்தில் திக்குமுக்காடிப் போவார்கள். ஆனால், சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2 படங்கள் நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைத்தன.

Actor Santhanams DD Returns third day box office collection

டிடி ரிட்டர்ன்ஸ்: தில்லுக்கு துட்டு திரைப்படத்தின் மூன்றாம் பாகமான டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படமும் நம்மை சிரிக்க வைத்துள்ளது. வெள்ளிக்கிழமை வெளியான இந்த படத்தை இயக்குநர் ராம்பாலாவின் உதவி இயக்குனராக இருந்த பிரேம் ஆனந்த் இப்படத்தை இயக்கி உள்ளார். இதில், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், மாறன், மாசூம் சங்கர், தீபா, பிரதீப் ராவத், விபின், பெப்சி விஜயன், தீனா, தங்கதுரை, முனீஸ் காந்த், சைதை சேது ஆகியோர் நடித்து உள்ளனர்.

பேய் பங்களா: ஹாரர், காமெடி ஜானரில் உருவாகி உள்ள இந்த படத்தில், சந்தானத் சதீஷ் என்ற கதாபாத்திரத்திலும், சுரபி சோபியா என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர். நடிகர் சந்தானம் தனது காதலி சுரபியை காப்பாற்றுவதற்காக பணத்தை திருடுகிறார். ஆனால், அந்த பணம் பேய் பங்களாவில் மாட்டிக் கொள்கிறது. வழக்கம் போல பேய் பங்களாவிற்குள் கலாட்டா தான் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் கதை.

வசூல் விவரம்: வெள்ளிக்கிழமை திரையரங்கில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ. 2 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இதையடுத்து சனிக்கிழமை 3 கோடி வசூலான நிலையில், மூன்றாம் நாளான நேற்று 3.40 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் மூன்று நாட்களில் டிடி ரிட்டர்ன்ஸ் படம் 8 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. படத்திற்கு நல்ல விமர்சனம் வந்து கொண்டு இருப்பதால் இனிவரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X