Actor Santhanam: இங்க நான் தான் கிங்கு.. 2 நாள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

சென்னை: சந்தானம் நடிப்பில் இங்க நான் தான் கிங்கு படம் இரு தினங்களுக்கு முன்பு சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முன்னதாக சந்தானம் நடிப்பில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை தொடர்ந்து இந்த படத்தில் சந்தானம் காமெடி கலாட்டா செய்துள்ளார். படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக பிரியாலயா அறிமுகமாகியுள்ளார்.

மேலும் இங்க நான் தான் கிங்கு படத்தில் சந்தானத்துடன் தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பால சரவணன் உள்ளிட்டவர்களும் இணைந்து நடித்துள்ளனர். படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் கடந்த இரு தினங்களில் ரசிகர்களை அதிகமாக திரையரங்குகளை நோக்கி வர செய்துள்ளது.

Actor Santhanam s Inge naan than kingu movie box office collections

இங்க நான் தான் கிங்கு படம்: நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான படம் இங்கு நான் தான் கிங்கு படம். கடன் வாங்கி அதை அடைக்க தவிக்கும் இளைஞரின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை நகைச்சுவையுடன் சொல்லும் முயற்சியாக இந்தப்படம் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஆனந்த் நாராயணன் இந்த படத்தை இயக்கியுள்ளார் எழுத்தாளர் எழிச்சூர் அரவிந்தன் எழுத்தும் படத்திற்கு சிறப்பாக அமைந்துள்ளது. படத்தில் சந்தானத்துடன் தம்பி ராமையா, பால சரவணன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, லொள்ளுசபா மாறன், மனோபாலா, கூல் சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

நடிகர் சந்தானம்: இந்தப் படத்திலும் தன்னுடைய பாடி ஷேமிங் டயலாக்குகளை தொடர்ந்து பேசி அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளார் சந்தானம். டிடி ரிட்டன்ஸ் படத்திற்கு பிறகு அவருக்கு இந்த படத்தில் காமெடி சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. அறிமுக நடிகை பிரியாலயா தனக்கு கொடுத்துள்ள வேலையை சிறப்பாகவே செய்துள்ளார். படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படம் கடந்த இரு தினங்களில் பெற்றுள்ள வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. முதல் நாளில் படம் 1.5 கோடி ரூபாய்களை சர்வதேச அளவில் வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பாக்ஸ் ஆபீஸ் வசூல்: இந்நிலையில் இரண்டாவது நாளில் 0.93 கோடிகளை வசூலித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களில் 1.93 கோடிகளை இங்க நான் தான் கிங்கு படம் வசூலித்துள்ளது. முன்னதாக வடக்குபட்டி ராமசாமி படம் சந்தானம் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த சூழலில் தற்போது காமெடியை மட்டுமே முழுமையாக நம்பி இங்க நான்தான் கிங்கு படத்தில் களமிறங்கியுள்ளார் சந்தானம். இந்தப் படம் அவருக்கு விமர்சன ரீதியாகவும் வசூல் இறுதியாகவும் சிறப்பாகவே அமைந்துள்ள சூழலில் படத்தின் கலெக்ஷன்ஸ் இன்றைய தினம் வாரயிறுதி நாளில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ரசிகர்கள் ஆர்வம்: மேலும் தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வுகள் நிறைவடைந்து விடுமுறையை கொண்டாடி வருவதால், அடுத்தடுத்து திரையரங்குகளில் ரிலீசாகும் படங்களுக்கு அதிகமான ஆதரவை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், சந்தானத்தின் காமெடிக்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் இருப்பார்கள் என்பதால் இந்தப் படம் வார நாட்களிலும் அதிகமான வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X