Sarath Babu Asset Details - உயிரிழந்த சரத்பாபு மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சென்னை: Actor Sarath Babu Biography News in Tamil: (நடிகர் சரத்பாபுவின் சொத்து மதிப்பு) பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கும் சூழலில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

தெலுங்கு சினிமாவில் 1973ஆம் ஆண்டு ராமராஜ்யம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் சரத்பாபு. அதன் பிறகு தெலுங்கில் வெளியான ராஜா படத்தில் வக்கீல் ராமு என்ற கதாபாத்திரத்தில் தோன்றினார். முதல் இரண்டு படங்களிலே தனது நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் சரத்பாபு. இதன் காரணமாக அவருக்கு திரைத்துறையில் வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

Actor Sarath Babu Biography, Wife, Family Members and Asset Details

கே.பாலசந்தரால் அறிமுகம்: தெலுங்கில் அவர் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தாலும் அவரை அடையாளப்படுத்தியது என்னவோ தமிழ் சினிமாதான். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய பட்டணப்பிரவேசம் படத்தின் மூலம் கடந்த 1977ஆம் ஆண்டு அறிமுகமானார். ஒருவருக்கு திறமை இருந்தால்தான் கே.பாலசந்தர் தனது திரைப்படத்தில் அறிமுகப்படுத்துவார் என்பதை நிரூபிக்கும் விதமாக அந்தப் படத்தில் மிகச்சிறப்பாக நடித்து தனது திறமையை நிரூபித்தார் சரத்பாபு.

ரஜினியுடன் கலக்கிய சரத்பாபு: மகேந்திரன் இயக்கத்தில் வெளியான முள்ளும் மலரும் திரைப்படம் ரஜினியின் திரைவாழ்க்கையில் முக்கியமான ஒன்று. அந்தப் படத்தில் குமரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சரத்பாபு. அதில் ரஜினியின் தங்கையான ஷோபாவை காதலிப்பது, சந்தர்ப்ப சூழ்நிலையால் ரஜினியின் வேலை பறிபோகும்போது அதை காப்பாற்ற முடியாமல் தவிப்பது என தனது நடிப்பில் கலக்கியிருப்பார். மகேந்திரனின் உதிரிப்பூக்கள் படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

அதேபோல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவான முத்து படத்திலும் ரஜினியுடன் நடித்து கவனம் ஈர்த்தார். ரஜினி மட்டுமின்றி கமல் ஹாசனுடன் சிப்பிக்குள் முத்து, மலையாளத்தில் டெய்சி உள்ளிட்ட படங்களில் நடித்தார். மிகச்சிறந்த குணசித்திர நடிகராக விளங்கியவர்.

ஹீரோவாக விருப்பமில்லை: பார்ப்பதற்கு ஹீரோ போல் இருந்தாலும் தனக்கு ஹீரோவாக நடிப்பதில் ஆர்வம் இல்லை என பல பேட்டிகளில் அவர் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமின்றி இந்தக் கதாபாத்திரத்தை இவரை விட்டால் வேறு யாராலும் செய்ய முடியாது என பிறர் சொல்லும் அளவுக்கு எனது நடிப்பு இருக்க வேண்டும் எனவும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவிலிருந்து ஓய்வு: தமிழ், மலையாளம், தெலுங்கும், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400 படங்கள்வரை நடித்திருக்கும் அவர் வயது மூப்பின் காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கினார் சரத்பாபு. கடைசியாக அவர் தமிழில் வசந்த முல்லை படத்தில் நடித்திருந்தார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து பெங்களூருவில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பிறகு ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு திரைத்துறையினர் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.

Actor Sarath Babu Biography, Wife, Family Members and Asset Details

சரத்பாபுவின் குடும்பம்: சரத்பாபு முதலில் ரமா பிரபா என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்த உறவு விவாகரத்தில் முடிந்தது. அவர்களுக்கு கௌதம் என்ற மகனும் காவ்யா என்ற மகளும் இருக்கிறார்கள். அதனையடுத்து சினேகா நம்பியார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமண உறவும் கருத்து வேறுபாடு காரணமாக பாதியில் முடிந்தது. அவர்களுக்கு சாய் கார்த்திக் என்ற மகனும், பல்லவி என்ற மகளும் இருக்கின்றனர்.

சரத்பாபுவின் சொத்து மதிப்பு எவ்வளவு?: இந்நிலையில் மறைந்த நடிகர் சரத்பாபுவின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, அவரது மொத்த சொத்து மதிப்பானது தோராயமாக மொத்தம் இரண்டு கோடி அமெரிக்க டாலர்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

சினிமாவில் இவ்வளவு காலம் இருந்தாலும் ஓரளவு மட்டுமே அவர் சொத்து சேர்த்து வைத்திருக்கிறாரா என ரசிகர்கள் அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பிவருகின்றனர். இதற்கிடையே, ஹைதராபாத்திலிருந்து அவரது உடல் தி.நகரில் இருக்கும் அவர் வீட்டுக்கு எடுத்து வரப்படவிருக்கிறது என்றும் சென்னையில்தான் அவரது இறுதி சடங்கு நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X