Sarath Babu: நடிகர் சரத்பாபு திடீர் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதி..

சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான சரத் பாபுவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 71.

தெலுங்கில் 1973ல் வெளியான ராம ராஜ்ஜியம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சரத்குமார்.

தமிழில் இயக்குநர் கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளியான பட்டின பிரவேசம் படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான சரத்பாபு அண்ணாமலை, முத்து உள்ளிட்ட படங்களில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்துள்ளார்.

திடீரென நடிகர் சரத்பாபுவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சென்னையில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நடிகை கல்யாணி தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் சரத்பாபு

நடிகர் சரத்பாபு

ராம ராஜ்ஜியம் படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமான நடிகர் சரத்பாபு பட்டின பிரவேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பார்க்க வெள்ளைக்கார துரை போல இருந்த சரத்பாபுவுக்கு அவரது தோற்றத்திற்கு தகுந்த மாதிரி பெரிய வீட்டுப் பிள்ளை கதாபாத்திரங்களே சினிமாவில் குவிந்தன. முத்து படத்திலும் ஜமீன் வாரிசாக நடித்திருப்பார் சரத்குமார்.

ரஜினிகாந்தின் நண்பர்

ரஜினிகாந்தின் நண்பர்


'முள்ளும் மலரும்', 'நினைத்தாலே இனிக்கும்', 'நெற்றிக்கண்', 'வேலைக்காரன்', ' முத்து', 'அண்ணாமலை' என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பல படங்களில் நடித்துள்ள சரத்பாபு நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அண்ணாமலை அசோக்கை ரசிகர்கள் என்றுமே மறக்கமாட்டார்கள்.

திடீர் உடல்நலக்குறைவு

திடீர் உடல்நலக்குறைவு

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகர் சரத்குமார். கடைசியாக தமிழில் ஆர்யா, பாபி சிம்ஹா நடித்த வசந்த முல்லை படத்தில் டாக்டராக நடித்திருந்தார். கடந்த ஆண்டு பவன் கல்யாண் நடிப்பில் வெளியான வக்கீல் சாப் படத்திலும் முக்கியமான ரோலில் நடித்திருந்தார் சரத்பாபு. இந்நிலையில், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக்குறைவு ஏற்பட்ட நடிகர் சரத்குமாரை உடனடியாக அவரது உறவினர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளதாக தெலுங்கு நடிகை கல்யாணி தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் சரத்குமார் பூரண குணம் பெற்று திரும்பி வரவேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X