Sarath Babu Passed Away: பழம்பெரும் நடிகர் சரத்பாபு காலமானார்.. சோகத்தில் திரைத்துறை!

ஹைதராபாத் : (Actor Sarath Babu Passed Away/ நடிகர் சரத்பாபு காலமானார்) பழம்பெரும் நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவு காரணமாக சற்றுமுன் காலமானார்.

ஆந்திராவைச் சேர்ந்த நடிகர் சரத்பாபு, 1973ஆம் ஆண்டு வெளியான ராம ராஜ்ஜியம் என்ற தெலுங்கு படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.

பட்டின பிரவேசம் என்கிற படத்தின் மூலம் சரத்பாபு தமிழில் அறிமுகம் ஆகி ரசிகர்களை கவர்ந்தார்.

Veteran actor Sarath Babu passed away

நடிகர் சரத்பாபு : தமிழில் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்த சரத்பாபுவுக்கு அந்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தராததால், இரண்டாம் நிலை கதாநாயகரான நடிக்கத் தொடங்கினார். விஜயகாந்த், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், சிரஞ்சீவி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் சரத்பாபு.

இரண்டு திருமணம் : சரத்பாபு நடிகை ரமா பிரபாவை திருமணம் செய்துக் கொண்டு பின் அவரை விவாகரத்து செய்தார். இதையடுத்து, நடிகர் நம்பியாரின் மகளான சினேகா நம்பியாரை 1990ம் ஆண்டு திருமணம் செய்தார். பின் அவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதை அடுத்து 2011ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார்.

Veteran actor Sarath Babu passed away

தொடர் சிகிச்சை : 71 வயதான சரத்பாபு இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழக அரசு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து முறையே சிறந்த நடிகர் மற்றும் சிறந்த துணை நடிகருக்கான நந்தி விருது என பல விருதுகளை வென்றுள்ளார். ஒரு சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த சரத்பாபு வயது மூப்பு காரணமாக சினிமாவை விட்டு விலகினார்.

ஹைதராபாத்தில் இருந்த சரத்பாபுவுக்கு கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து, பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் உயர் சிகிச்சைக்காக ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரத்பாபு சற்று முன் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். அவரது மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தவறான வதந்தி : செப்சிஸ் நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகர் சரத்பாபு, கடந்த வாரம் உயிரிழந்துவிட்டதாக வதந்தி பரவியது. கமல்ஹாசன், குஷ்பு உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் அவருக்கு இரங்கல் தெரிவித்திருந்த நிலையில், சரத்பாபுவின் பிஆர்ஓ நடிகர் சரத்பாபுவின் உடல்நலம் தேறி வருகிறது. அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் செய்தி உண்மை இல்லை என தெரிவித்து இருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X