செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்.... மலரும் நினைவுகளில் மூழ்கிய சரத்பாபு

ஐதராபாத் : நடிகர் சரத்பாபு தெலுங்கில் அதிகமாக நடித்திருந்தாலும் தமிழில் சிறப்பான பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழின் முக்கியமான நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார்.

இவரது நடிப்பில் தமிழில் முக்கியமான படமாக முள்ளும் மலரும் படம் விளங்குகிறது. இதன் நினைவுகளை அவர் தற்போது பகிர்ந்துள்ளார்.

முள்ளும் மலரும் படம்

முள்ளும் மலரும் படம்

நடிகர் சரத்பாபு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அங்கமாக காணப்படுகிறது. தெலுங்கு நடிகராக இருந்தாலும் இவரது நடிப்பில் பல தமிழ் படங்கள் மக்களின் நினைவு புத்தகத்தில் எப்போதும் இடம்பெற்றிருக்கும். சரத்பாபுவின் நடிப்பில் முள்ளும் மலரும் படம் எவர்கிரீன் காவியமாக விளங்குகிறது.

உண்மை கதாபாத்திரங்கள்

உண்மை கதாபாத்திரங்கள்

இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் வசனங்கள் குறைவு என்றாலும் அனைத்து கேரக்டர்களும் கேரக்டர்களாக இல்லாமல் உண்மையான கதாபாத்திரங்களாக வலம் வந்தனர். படத்தில் காளியாக நடித்த ரஜினி காந்த் மற்றும் ஷோபா இருவரும் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டு நடித்தனர்.

முக்கியமான படம்

முக்கியமான படம்

இவர்களை படத்தின் ஒரு அங்கமாக பார்க்க முடியாது. மாறாக நமது பக்கத்தில் வாழ்ந்தவர்களாகவே படத்தில் பார்க்க முடியும். அண்ணன் தங்கை பாசத்தை படமாக்கிய வகையில் இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான படம். இவர்களின் கேரக்டர்களை அந்த அளவில் வடிவமைத்துள்ளார் இயக்குநர் மகேந்திரன்.

பகிர்ந்த சரத்பாபு

பகிர்ந்த சரத்பாபு

இந்த படத்தில் நடிகர் சரத்பாபுவும் சிறப்பாக நடித்திருப்பார். ரஜினிக்கு எதிராக இவரை காட்டியிருந்தாலும் இருவருக்கும் இடையில் சூழ்நிலையே வில்லனாக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் இந்த படத்தின் நினைவுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் சரத்பாபு பகிர்ந்துள்ளார்.

சிறப்பான புகைப்படம்

சிறப்பான புகைப்படம்

அந்த படத்தில் நடிகர்கள் சரத்பாபு, ரஜினிகாந்த், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்டவர்கள் காணப்படுகின்றனர். ரஜினி மனம்விட்டு சிரிக்கிறார். சரத்பாபுவும் அதில் பங்கேற்கிறார். சுற்றிலும் உள்ளவர்களும் அவர்களை ஆர்வத்துடன் கண்டு களிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X