Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- News
"சலங்கை ஒலி" இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார்.. சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிரபல ஹோட்டலில் உணவருந்திய சரத்குமார்.. சூட்டிங் போகும் வழியில் சுவாரஸ்யம்!
சென்னை : நடிகர் சரத்குமார் வில்லன், ஹீரோ என நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது கேரக்டர் ரோல்களில் கலக்கி வருகிறார்.
விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ள அவரது கைவசம் தற்போது அதிகமான படங்கள் உள்ளன.
இதனிடையே தற்போது கே எஸ் ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகிவரும் ஹிட்லிஸ்ட் படத்தின் சூட்டிங்கில் இணைந்து நடித்து வருகிறார் சரத்குமார்.
ஐ
லவ்
யூ
தலைவா..ரஜினிகாந்துடன்
செல்ஃபி
எடுத்த
வரலக்ஷ்மி
சரத்குமார்!

பன்முகம் காட்டும் சரத்குமார்
சினிமா, தயாரிப்பு, அரசியல் என பன்முகம் காட்டி வருகிறார் நடிகர் சரத்குமார். சென்னையின் ஆணழகன் பட்டம் பெற்ற இவருக்கு அதுவே திரையில் வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. ஆரம்பத்தில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மிரட்டிய சரத்குமார் நடிப்பில் வெளியான சூரியன் இவரை நாயகனாக ரசிகர்கள் மனதில் நிறுத்தியது.

ஹீரோவாக கவர்ந்த சரத்குமார்
இந்தப் படத்தை தொடர்ந்து சிறப்பான பல படங்களில் நடித்து ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்தார் சரத்குமார். இவரது சூரியவம்சம், நாட்டாமை போன்ற படங்கள் இவருக்கு ரசிகர்களிடம் சிறப்பான இடத்தை பெற்றுத் தந்தன. சிறப்பான வசூலையும் பெற்றுத் தந்தன. தொடர்ந்து ஹீரோவாக நடித்துவந்த சரத்குமார், தற்போது கேரக்டர் ரோல்களில் கலக்கி வருகிறார்.

வாரிசு படத்தில் முக்கிய ரோல்
சமீபத்தில் விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை இவர் ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொண்டு, விஜய் ரசிகர்களின் பேவரைட்டாக மாறியுள்ளார். இந்தப் படம் ரசிகர்களுக்கு ஏராளமான சர்ப்பிரைஸ்களை கொடுக்கும் என்று தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் விஜய்யை பார்த்து பல விஷயங்களில் தான் வியப்படைந்ததாகவும் கூறியுள்ளார்.

பிரபல ஹோட்டலில் சாப்பிட்ட சரத்குமார்
தற்போது கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில் ஹிட் லிஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே இன்றைய தினம் பிரபல ஹோட்டலில் சிற்றுண்டி சாப்பிட்டுள்ளார் சரத்குமார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார். ஹோட்டல் ஊழியர்களுடன் அவர் உரையாடி மகிழ்ந்துள்ளார்.

சரத்குமார் இன்ஸ்டாகிராம் பதிவு
இதுகுறித்த சரத்குமாரின் இன்ஸ்டாகிராம் பதிவில் கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகிவரும் ஹிட்லிஸ்ட் படத்தின் சூட்டிங்கிற்காக செல்லும் வழியில் நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டர் அருகில் உள்ள அடையாறு ஆனந்தபவன் உணவகத்தில் இன்று காலை சிற்றுண்டி அருந்தியதாகவும் அப்போது அங்கு பணியாற்றும் சகோதர சகோதரிகளுடன் உரையாடி மகிழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.