ஃபிட்னஸுக்கு பெயர் போன நடிகர் சரத் குமார் பிளாக் காஃபியில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து சாப்பிடுவாராம்

சென்னை: நடிகர்கள் பெரும்பாலும் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்கள்.

எம்.ஜி.ஆர், கமலஹாசன் உள்ளிட்டோர் கடுமையான உடற்பயிற்சி செய்பவர்களாக இருந்தார்கள்.

ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்டோர் ஒரே மாதிரியான உடல் வாகை ஆரம்பத்திலிருந்து இன்று வரை பராமரித்து வருகின்றனர்.

கட்டுக் கோப்பான நடிகர்கள்

கட்டுக் கோப்பான நடிகர்கள்

இப்போது உள்ள நடிகர்களில் ஆர்யா தான் பிட்னஸ் ஃப்ரீக்காக அனைவராலும் அறியப்படுகிறார். அதிலும் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் அனைத்து நடிகர்களும் பாடி பில்டர்ஸாக இருந்தும் கூட இவர் மட்டும் தனியாக தெரிவார். மற்ற நடிகர்களே இவரை 'பீஸ்ட்' என்றுதான் படப்பிடிப்பில் அழைத்தார்களாம்.

சூர்யா முதல் சூரி வரை

சூர்யா முதல் சூரி வரை

அதேபோல் நடிகர் சூர்யாவும் அருண் விஜய்யும் அனைத்து படங்களிலும் கட்டுக்கோப்பாக காணப்படுவார்கள். இருவருமே 6 பேக்ஸ் வைத்து நடித்துள்ளார்கள். அவர்களை போன்று நடிகர்கள் தனுஷ் மற்றும் பரோட்டா சூரியும் சிக்ஸ் பேக்ஸ் வைத்து நடித்துள்ளனர்

தலைவன் சரத்குமார்

தலைவன் சரத்குமார்

என்னதான் இப்போதுள்ள நடிகர்கள் தங்களது உடலை பராமரித்து வந்தாலும் அவர்களுக்கெல்லாம் முன்னோடியாக கருதப்படுபவர் நடிகர் சரத்குமார். 1990களில் தனது கட்டு மஸ்தான் உடலுக்காகவே பெயர் போனவர். 1974-ஆம் ஆண்டு மிஸ்டர் மெட்ராஸ் யூனிவர்சிட்டி பட்டத்தை வென்றவர். பள்ளி மற்றும் கல்லூரியில் ஹாக்கி, ஃபுட்பால், கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு 1970 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டவர்.

Recommended Video

கண்ணு வைக்க வேண்டாம் JayamRavi & Karthi speech | PS1 Song lauch *Kollywood
சரத்குமார் டயட்

சரத்குமார் டயட்

70 வயதை நெருங்கியுள்ள சரத்குமார் இன்றும் உடற்பயிற்சி செய்து இளைஞர்களுக்கு முன்னோடியாக திகழ்கிறார். அவரது டயட்டை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தினமும் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடித்துவிட்டு பின்னர் பிளாக் காஃபியில் ஒரு டீஸ்பூன் நெய்யை கலந்து குடிப்பாராம். அதன் பின்னர் உடற் பயிற்சி செய்துவிட்டு ஒன்பது மணிக்கு நான்கு முட்டைகளின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட்டு 11 மணிக்கு ஏ.பி.சி என்று அழைக்கப்படும் ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஜூஸை குடித்துவிட்டு மதியம் பெப்பர் மற்றும் உப்பினால் வேகவைக்கப்பட்ட சிக்கனை மட்டும் சாப்பிடுவாராம். சிக்கன் என்றால் குழம்பு அல்ல, வெறும் வேக வைக்கப்பட்ட இரண்டு துண்டு சிக்கன். அரிசி சோறோ அல்லது சப்பாத்தியோ கூட சேர்த்துக் கொள்ள மாட்டாராம். பின்னர் மாலை கொஞ்சம் வேர்க்கடலை சேர்த்த அவல் உண்டுவிட்டு ஏழு மணிக்கு மட்டன் சூப் அல்லது சிக்கன் சூப் குடித்துவிட்டு அத்துடன் அன்றைய உணவை முடித்துக் கொண்டு மீண்டும் மறுநாள் காலை அதே டயட்டை கடைபிடிப்பதாக சரத்குமார் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X