லாலேட்டனின் 61வது பிறந்தநாள் கொண்டாட்டம்... சரத்குமார் வாழ்த்து

கொச்சி : லாலேட்டன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் மலையாள நடிகர் மோகன்லால் தனது 61வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சரத்குமாரும் தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தின்மூலம் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்

ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்

மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளவர் நடிகர் மோகன்லால். லாலேட்டன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இதுவரை 164 படங்களில் நடித்துள்ளவர். லூசிபர் உள்ளிட்ட முக்கியமான படங்களில் நடித்ததன்மூலம் ரசிகர்களை கட்டிப் போட்டவர்.

ஓடிடியில் த்ரிஷ்யம் 2

ஓடிடியில் த்ரிஷ்யம் 2

அடுத்ததாக அவரது த்ரிஷ்யம் 2 படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதன் முதல் பாகம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படமும் சிறப்பான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் அவரது பிறந்த தினத்தையொட்டி படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

4 மொழிகளில் ரீமேக்

4 மொழிகளில் ரீமேக்

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. த்ரிஷ்யம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் த்ரிஷ்யம் 2 படத்தின் ரீமேக் உரிமையையும் இந்தியில் பனோரமா ஸ்டூடியோ இன்டர்நேஷனல் வாங்கியுள்ளது.

Recommended Video

Bharathi Kannamma Serial Climax Scene எப்போ? | Venba, Bharathi, Farina
அஜய் தேவ்கன் ஹீரோ?

அஜய் தேவ்கன் ஹீரோ?

முதல் பதிப்பில் அஜய் தேவ்கன் லீட் ரோலில் நடித்திருந்த நிலையில் இரண்டாவது பாகத்திலும் அவரே நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இநநிலையில் மோகன்லாலின் பிறந்தநாளை யொட்டி அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை இணையதளத்தின்மூலம் தெரிவித்து வருகின்றனர்.

நீடித்த மகிழ்ச்சிக்கு வாழ்த்து

நீடித்த மகிழ்ச்சிக்கு வாழ்த்து

சிறந்த நடிகரும் நல்ல நண்பருமான மோகன்லாலிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று நடிகர் சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது நீடித்த மகிழ்ச்சிக்கும் பாதுகாப்பான வாழ்க்கைக்கும் தான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X