Sarath & Radikaa: ஒரே தொட்டியில் இரு செடிகள்.. ராதிகா வெளியிட்ட திருமண நாள் வீடியோ!
சென்னை: நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் சரத்குமார் இருவரும் கடந்த 2001ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டனர். இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். இருவரும் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். குறிப்பாக சரத்குமார் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான வாரிசு, போர் தொழில் படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப்படங்களாக மாறியுள்ளன. அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து சரத்குமார் தன்னுடைய நடிப்பிற்கு தீனி போடும் படங்களில் நடித்து வருகிறார்.
ராதிகா சரத்குமாரும் நடிப்பு, சீரியல் தயாரிப்பு என அடுத்தடுத்து பிசியாக உள்ளார். சரத்குமார் மற்றும் ராதிகா ஜோடிக்கு திருமணம் நடந்து 23 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நேற்றைய தினம் இவர்கள் தங்களது திருமண நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக காணப்படும் ராதிகா சரத்குமார் தொடர்ந்து தன்னுடைய குடும்பத்தினருடன் மற்றும் நண்பர்களுடன் தான் இருக்கும்படியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் நேற்றைய தினம் தன்னுடைய திருமண நாள் கொண்டாட்டத்தையொட்டி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சரத்குமார் -ராதிகா: நடிகை ராதிகா மற்றும் நடிகர் சரத்குமார் இருவரும் காதலித்து கடந்த 2001ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டனர். இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். திருமணம் முடிந்த நிலையிலும் இருவரும் தொடர்ந்து சினிமாவில் பிசியாக நடித்து வருகின்றனர். நடிப்பில் மட்டுமில்லாமல் சீரியல் தயாரிப்பிலும் ராதிகா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதேபோல சரத்குமாரும் பிசியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் இவரது வாரிசு, போர் தொழில் படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தன. வசூலிலும் சிறப்பாக அமைந்தன. சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் கடந்த 23 ஆண்டுகளாக மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்துவருகின்றனர்.
திருமண நாள் கொண்டாட்டம்: இந்நிலையில் நேற்றைய தினம் தங்களது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இதையொட்டி அவர்ளுக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். இதனிடையே தங்களது 23 ஆண்டு திருமண பந்தத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு காலகட்டங்களில் தாங்கள் ஒன்றாக இருந்த புகைப்படங்களை ஒருங்கிணைத்து இன்ஸ்டாகிராமில் ராதிகா வீடியோவாக பகிர்ந்துள்ளார். மிகவும் கலர்புல்லாக அமைந்துள்ள இந்த வீடியோவிற்கு ஏராளமானோர் லைக்ஸ் செய்துள்ளனர். நடிகை மீனா ஸ்வீட்டஸ்ட் ஜோடிக்கு வாழ்த்துக்கள் என்று கமெண்ட் செய்துள்ளார்.
க்யூட் வீடியோ: இந்த வீடியோவை பகிர்ந்த ராதிகா ஒரே தொட்டியில் இரு செடிகள் என்ற சீன பழமொழியையும் கேப்ஷனில் தெரிவித்துள்ளார். தமிழ் சீனிமாவில் பல ஜோடிகள் இணைந்து ரிசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2001ம் ஆண்டிலேயே ஜோடி சேர்ந்த ராதிகா மற்றும் சரத்குமார் ஜோடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றனர். இவர்களுக்கு இது இரண்டாவது திருமணம் என்ற வகையில் முதல் திருமண உறவுகளையும் இவர்கள் கொண்டாடி வருகின்றனர். இதன் வீடியோக்களையும் புகைப்படங்களையும் இவர்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
பிசியான தம்பதி: நடிகர் சரத்குமார் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிப் படங்களில் தொடர்ந்து பயணித்து வருகிறார். அரசியலிலும் செயல்பட்டு வருகிறார். 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், வில்லனாக தன்னுடைய கேரியரை துவங்கி ஹீரோவாக மாஸ் காட்டியவர். சாயா என்பவரை திருமணம் செய்த இவரது மகள் வரலட்சுமி சரத்குமார் சரத்குமாரும் பிசியான நடிகையாக உள்ளார். அதிகமான உழைப்பை மட்டுமில்லாமல் சிறப்பான கொண்டாட்டங்களையும் இவரும் ராதிகாவும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆதர்ச தம்பதிகள் நீண்ட காலம் இதேபோல சந்தோஷமாக வாழ வேண்டும் என்று ரசிகர்களும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











