22 வருடங்களை கடந்த திருமண வாழ்க்கை.. ராதிகாவுடன் அழகிய வீடியோ வெளியிட்ட சரத்குமார்!
சென்னை : நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் கடந்த 2001ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார்.
சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் தற்போது தங்களுடைய 22 ஆண்டுகால திருமண நிறைவை கொண்டாடி வருகின்றனர்.
இந்த கொண்டாட்டத்தையொட்டி ராதிகாவுடன் தான் இத்தனை ஆண்டுகாலம் வாழ்ந்த வாழ்க்கையை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் சரத்குமார் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

நடிகர் சரத்குமார்
நடிகர் சரத்குமார், வில்லனாக தன்னுடைய தமிழ் சினிமா கேரியரை துவக்கி ஹீரோவாக, காமெடியனாக, கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக பல்வேறு பரிணாமங்களில் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இவரது பல வெற்றிப் படங்கள் ரசிகர்களை இன்றளவும் மகிழ்வித்து வருகின்றன. நாட்டாமை, சூரியவம்சம் என இவரது வெற்றிப் படங்களின் பட்டியல் நீளமானது.

வாரிசு படத்தில் சரத்குமார்
சமீபத்தில் விஜய் படத்தில் அவருக்கு அப்பாவாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சரத்குமார். தன்னுடைய மகனை, தன்னுடனேயே இருக்க வைக்க வேண்டும் என்ற வேட்கையையும், அப்படி கோரிக்கை வைக்கும்போது தன்னுடைய ஈகோவால் ஏற்படும் தயக்கத்தையும் மிகவும் அழகாக வெளிப்படுத்தியிருந்தார் சரத்குமார்.

இயல்பான நடிப்பு
அவரது இந்தக் கேரக்டர் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. சரத்குமாரும், தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை மிகவும் அழகாக திரையில் கொண்டு வந்திருந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தன்னை மிகவும் சிறப்பாக இயல்பான நடிப்பை கொடுத்து வருகிறார் சரத்குமார்.

ராதிகாவுடன் திருமணம்
கடந்த 2001ம் ஆண்டில் நடிகை ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார் சரத்குமார். இவர்கள் இருவரும் தங்களுடைய வாழ்க்கையை மிகவும் அழகாக கொண்டு சென்று வருகின்றனர். இவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். தன்னுடைய முதல் மனைவிக்கு பிறந்த வரலட்சுமியுடனும் சிறப்பான உறவை மெயின்டெயின் செய்து வருகிறார் சரத்குமார்.

22 ஆண்டுகால திருமண வாழ்க்கை
சமீபத்தில் தன்னுடைய தந்தையுடன் சுற்றுலாவிற்கு சென்ற புகைப்படங்களையும் வரலட்சுமி பகிர்ந்திருந்தார். நீச்சல் குளத்தில் குடும்பத்தினருடன் கும்மாளம் போட்ட புகைப்படங்கள் அதிகமான ரசிகர்களால் பகிரப்பட்டன. இந்நிலையில் ராதிகாவுடன் 22வது ஆண்டு திருமணத்தை கொண்டாடிவரும் சரத்குமார் இதுகுறித்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

மகிழ்ச்சி வீடியோ பகிர்வு
22 ஆண்டுகால வாழ்க்கையில் பல்வேறு தியாகங்கள், புரிதல், மகிழ்ச்சி, துக்கம் உள்ளிட்டவற்றை கொண்ட நீண்ட பயணத்தை கடந்து வந்துள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த பந்தம் இன்னும் நீண்ட நாட்களுக்கு தொடர தான் கடவுளிடம் வேண்டிக் கொள்வதாகவும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











