கம்பீர நாயகன் சரத்குமாருக்கு இன்று பிறந்தநாள்… குவியும் ரசிகர்களின் வாழ்த்து!

சென்னை : அசராத நடிப்பாலும் மற்றவர்களை அசரவைக்கும் கம்பீரத்தாலும் இன்று வரை அனைவரையும் கவர்ந்து வருபவர் நடிகர் சரத்குமார்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து நாட்டாமை, சூரியவம்சம் என காலத்தால் அழியாத பல படங்களை கொடுத்த இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

ஜூலை 14 ஆம் தேதியான இன்று இவர் தனது 66வது பிறந்தநாளை குடும்பத்தாருடன் கொண்டாடி வருவதையொட்டி உலகெங்கிலுமுள்ள இவரது ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்ற நிலையில் திரைத்துறையினரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

பல ஆண்டுகளாக

பல ஆண்டுகளாக

காலத்தால் அழியாத பல வெற்றி படங்களை தொடர்ந்து நமக்கு கொடுத்து வந்த நடிகர் சரத்குமார் முதலில் சிறிய கதாபாத்திரங்களில் தெலுங்கு படங்களில் அறிமுகமாகி தற்பொழுது வெற்றி நாயகனாக தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறார்.

வில்லன் நடிகராக

வில்லன் நடிகராக

எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை தனது கம்பீர நடிப்போடு அதற்கு மேலும் அழகு சேர்த்து மக்களின் மனதில் எளிதாக பதியவைத்து இன்றுவரை வெற்றி நாயகனாக வலம் வருகிறார். விஜயகாந்த் நடிப்பில் ஆர்கே செல்வமணி இயக்கிய புலன்விசாரணை திரைப்படத்தின் மூலம் நம் அனைவருக்கும் வில்லன் நடிகராக பரிச்சயமான சரத்குமார் பின்னாளில் பல்வேறு கதாபாத்திரங்களின் மூலம் நம் அனைவரையும் கவர்ந்து பின் கதாநாயகனாகவும் ரசிக்க வைத்து வருகிறார்.

பல சாதனைகள்

பல சாதனைகள்

இவரின் நடிப்பில் வெளியான பல படங்கள் இன்றும் குடும்பங்களால் கொண்டாடப்படும் திரைப்படங்களாக இருந்து வருகிறது அதில் மிக முக்கியமானது சூரியவம்சம், நட்புக்காக, சமுத்திரம் உள்ளிட்ட திரைப்படங்கள் பல நாட்கள் திரையில் வெற்றிகரமாக ஓடி பல சாதனைகளை புரிந்துள்ளது.

தலைமகன்

தலைமகன்

இவ்வாறு நம் அனைவருக்கும் கதாநாயகனாகவும் வில்லனாகும் மிகவும் பரிச்சயமான சரத்குமார் பல படங்களை தயாரித்துள்ளார். இவரின் தயாரிப்பில் வெளியான ஜித்தன், சென்னையில் ஒரு நாள், மாரி, இது என்ன மாயம் போன்ற திரைப்படங்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்து இவரை ஒரு நல்ல தயாரிப்பாளராகவும் கொண்டு சென்றது. மேலும் இவர் தலைமகன் என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராகவும் இருந்து வந்துள்ளார்.

அதே கம்பீரத்துடன்

அதே கம்பீரத்துடன்

இவ்வாறு நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல முகங்களை திரைத்துறையில் கொண்டு வலம் வரும் சரத்குமார் ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு ஆணழகன் போட்டிகளில் கலந்து பல விருதுகளையும் வென்றுள்ளார். இவ்வாறு இயல்பிலேயே உடற்பயிற்சியின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட சரத்குமார் இன்றுவரை அதை கட்டுக்கோப்புடன் வைத்து தொடர்ந்து அதே கம்பீரத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மகிழ்ச்சியுடன் கொண்டாடி

மகிழ்ச்சியுடன் கொண்டாடி

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் கம்பீர நடிகராக வலம் வரும் சரத்குமார் இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தாருடன் மிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார். ஜூலை 14 ஆம் தேதியான இன்று இவர் தனது 66வது பிறந்தநாளை கம்பீரத்துடன் கொண்டாடி வருவதையொட்டி பல்வேறு திரைத்துறை நண்பர்கள் இவருக்கு வாழ்த்துக்களை சொல்லி வரும் நிலையில் உலகெங்கிலுமுள்ள இவரது தீவிர ரசிகர்கள் வாழ்த்து மழையில் நனைய வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X