க்ரைம்,த்ரில்லர் வெப் தொடரில் சரத்குமார்… இணையத்தில் தடத்தை பதிக்கும் ராதிகா!
சென்னை : நடிகர் சரத்குமார் முதன்முறையாக வெப் தொடரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த வெப் தொடரை ராதிகா சரத்குமாரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராடன் மீடியா வொர்க்ஸ் தயாரிக்க உள்ளது.
இரை என தலைப்பிடப்பட்டுள்ள இந்த வெப் தொடரை, ராஜேஷ் எம் செல்வா இயக்க உள்ளார்.

மக்கள் விரும்புகின்றனர்
வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள என அனைத்து மொழிகளில் அதிக தொடர்கள் தயாராகின்றன. வெப் தொடர்களில் நடிப்பவர்களுக்கு அதிக சம்பளமும் கொடுக்கப்படுகிறது.

பல முன்னணி நடிகர்கள்
சூர்யா, சத்யராஜ், பிரசன்னா, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், மீனா, தமன்னா, நித்யா மேனன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க வந்துள்ளனர். சமந்தா. பிரியாமணி நடித்த பேமிலிமேன் 2 வெப் தொடர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

வெப் தொடரில்
இந்தநிலையில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரும் வெப் தொடரில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த தொடரை ராதிகா சரத்குமாரின் சொந்த நிறுவனமான ராடன் மீடியா வொர்க்ஸ் தயாரிக்க உள்ளது. தூங்காவனம், கடாரம் கொண்டான் படங்களை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா இத்தொடரை இயக்க உள்ளார்.

இரை
க்ரைம், த்ரில்லரான இந்த வெப் தொடருக்கு 'இரை' என தலைப்பிடப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையமைக்கிறார்,யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் நடிகைகள் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

முதன்முறையாக வெப்தொடரில்
நடிகை ராதிகா சரத்குமார்,சித்தி,அண்ணாமலை, வாணிராணி, சித்தி2 என பல தொடர்களையும் சில திரைப்படங்களையும் ராடன் மீடியா வொர்க்ஸ் மூலம் தயாரித்துள்ளார். தற்போது முதன்முறையாக வெப் தொடரின் மூலம் இணையத்தில் தனது தடத்தை பதிக்கிறார் ராதிகா சரத்குமார்.


Click it and Unblock the Notifications











