சூரியவம்சம் மாதிரி படம் கொடுக்க கடினமாக உழைப்பேன்.. 25வது ஆண்டு கொண்டாட்டத்தில் சரத்குமார் உறுதி!

சென்னை : நடிகர் சரத்குமார், ராதிகா, தேவயானி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம் சூரியவம்சம்.

Recommended Video

Suriya Vamsam தான் 90's Kids Motivational படம் | Sarathkumar *Kollywood | Filmibeat Tamil

இந்தப் படம் தற்போது 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் 25வது ஆண்டு கொண்டாட்டத்தில் நடிகர் சரத்குமார் இந்தப் படம் குறித்த நினைவுகளை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

சூரியவம்சம் படம்

சூரியவம்சம் படம்

கடந்த 1997ல் நடிகர் சரத்குமார், ராதிகா, தேவயானி, மணிவண்ணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியானது சூரியவம்சம். படத்தை விக்ரமன் இயக்கியிருந்தார். படத்தில் இடம்பெற்ற ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ, நட்சத்திர ஜன்னலில் உள்ளிட்ட பாடல்கள் ஹிட்டடித்தன.

அப்பா -மகன் கேரக்டர்

அப்பா -மகன் கேரக்டர்

படத்தில் அப்பா மற்றும் மகன் கேரக்டர்களில் சரத்குமார் நடித்திருந்தார். அப்பா சரத்குமாருக்கு ராதிகாவும் மகனுக்கு தேவயானியும் ஜோடியாக நடித்திருந்தனர். இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. வெளிவந்த காலகட்டத்தில் மட்டுமில்லாமல் தற்போது பார்க்கும்போதும் ரசிகர்களை கட்டிப்போடும் அளவில் சிறப்பான திரைக்கதையோடு இந்தப்படம் வெளியானது.

25 ஆண்டு கொண்டாட்டம்

25 ஆண்டு கொண்டாட்டம்

இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி தற்போது 25 ஆண்டுகளை கடந்துள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் சரத்குமார். இந்தப் படம் வெளியான நாட்களை நினைத்துப்பார்ப்பது மிகவும் சிறப்பான தருணம் என்றும் சூரியவம்சம் படம் ஒரு பிளாக்பஸ்டர் படம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திரையரங்குகளில் சாதனை

திரையரங்குகளில் சாதனை

திரையரங்குகளில் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட படம் என்ற பெருமையை தற்போதுவரை இந்தப் படம் தக்க வைத்துள்ளதாகவும், ஏறக்குறைய இந்தப் படம் ஒரு வருடம் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்ததையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். இது சாதாரண சாதனை இல்லை என்றும் பதிவிட்டுள்ளார்.

சரத்குமார் நெகிழ்ச்சி

சரத்குமார் நெகிழ்ச்சி

இந்தப் படத்தை விரும்பி பார்த்த ரசிகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள சரத்குமார், படத்திற்கு மக்கள் தந்த ஆதரவை என்றும் மறக்க முடியாது என்றும் கூறியுள்ளார். மீண்டும் அப்படி ஒரு படத்தை கொடுக்க கடினமாக உழைப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அப்பா -மகன் கேரக்டர்

அப்பா -மகன் கேரக்டர்

ஒரு காலகட்டம் இருந்தது நடிகர்கள் அப்பா -மகன் கேரக்டர்களில் நடித்து படங்கள் வெளியாகின. இந்த வகையில் சரத்குமாரும் சில படங்களில் இத்தகைய கேரக்டர்களில் நடித்து படங்கள் வெளியாகின. ஐயா உள்ளிட்ட படங்கள் அவருக்கு சிறப்பாகவே கைக்கொடுத்தன. அந்த வகையில் சூரியவம்சம் சிறப்பான கதைக்களத்துடன் ரசிகர்களை கவர்ந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X