Sarath kumar :அதிகரிக்கும் வரவேற்பு.. போர் தொழில் ஹீரோ செஞ்ச வேலையை பாருங்க!
சென்னை : நடிகர்கள் சரத்குமார், அசோக் செல்வன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது போர் தொழில் படம்.
இன்வெஸ்கேட்டிவ் க்ரைம் ஆக்ஷன் த்ரில்லராக வெளியாகியுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். படத்தில் மேலும் நிகிலா விமல், தேனப்பன் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை கொடுத்துவரும் நிலையில் கடந்த 3 நாட்களில் படத்தின் வசூல் சிறப்பாக அமைந்துள்ளது.
ரசிகர்களை உற்சாகப்படுத்திய சரத்குமார் :நடிகர்கள் சரத்குமார், அசோக்செல்வன், நிகிலா விமல், தேனப்பன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் ரிலீசானது போர் தொழில். இந்தப் படத்திற்கு அதிகமாக ப்ரமோஷன்கூட செய்யப்படாத நிலையில், முதல் நாளில் படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவில் அமையவில்லை. ஆனால் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் தொடர் விமர்சனங்களால் படம் அன்றைய இரவுக் காட்சியிலேயே களைகட்டியது. திரையரங்குகளில் ஏராளமான ரசிகர்கள் டிக்கெட்டிற்காக காத்திருந்ததை பார்க்க முடிந்தது.
இதையடுத்து இந்தப் படம் கடந்த மூன்று நாட்களில் ரசிகர்களின் பேராதரவுடன் பிக் அப் ஆகியுள்ளது. நல்ல கதை என்றால் ரசிகர்கள் ஆதரவு எப்போதுமே இருக்கும் என்பதற்கு இந்தப் படம் மற்றொரு உதாரணமாகியுள்ளது. மேலும் இந்தப் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை தொடர்ந்து, திரையரங்குகளின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டுள்ளது. படத்தில் உயரதிகாரிக்குரிய கடுமையை சரத்குமாரிடமும், அவரிடம் வேலை கற்றுக் கொள்வதற்காக இணையும் புதிய அதிகாரியாக அசோக் செல்வனின் மிகையில்லாத நடிப்பும் சிறப்பை சேர்த்துள்ளது.
இந்தப் படத்திற்கு கிடைத்துவரும் வரவேற்பால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். அசோக் செல்வன் உள்ளிட்டவர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் நன்றியை தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து திரையரங்குகளில் சென்று ரசிகர்களையும் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தப் படத்தின் வசூல் இந்த மூன்று நாட்களில் 5.25 கோடி ரூபாய்களை தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கோவை கேஜி சினிமாஸ் திரையரங்கில் இந்தப் படத்தினை ரசிகர்களுடன் இணைந்து நடிகர் சரத்குமார் பார்த்துள்ளார். அங்கு அவருக்கு ரசிகர்கள் மிகச்சிறப்பான வரவேற்பை கொடுத்ததுடன் அவருடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டனர். ரசிகர்களின் அன்பால் அவர் நெகிழ்ச்சிக்குள்ளானார். இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், தொடர்ந்து படத்தின் கலெக்ஷன்ஸ் இனிவரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் தான் இயக்கியுள்ளார் என்ற உண்மையை இந்தப்படத்தை பார்ப்பவர்களால் ஏற்க முடியவில்லை. அந்த அளவிற்கு சிறப்பான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளால் ரசிகர்களை சீட் நுனியில் அமர வைத்துள்ளார் இயக்குநர். படத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இரவு நேரக் காட்சிகளில் திகிலை ஏற்படுத்தும் வகையில் ஒளிப்பதிவு காணப்படுகிறது. இசையும் கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











