வாரிசு படம் பேமிலி டிராமான்னு யார் சொன்னது.. சரத்குமார் கேள்வி.. அப்ப அது இல்லியா!
சென்னை : நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, ஷாம் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது வாரிசு படம்.
இந்தப் படம் குடும்ப சென்டிமெண்ட்டுடன் எடுக்கப்பட்டு வருவதாக அதன் தயாரிப்பாளர் தில் ராஜு முன்னதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அடுத்தக்கட்ட சூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

விஜய்யின் வாரிசு படம்
நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, ஷாம், ஜெயசுதா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துவரும் படம் வாரிசு. விஜய்யின் 66வது படமாக வாரிசு உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார் தமன். அவர் ஏறக்குறைய அனைத்துப் பாடல்களையும் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

கம்போசிங்கை துவங்கிய தமன்
இந்தப் படம் குறித்து அவ்வப்போது தமன் அப்டேட் கொடுத்து வருகிறார். இந்தப்படத்தில் பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதி வருகிறார். இவர் விஜய்யின் ஆளப்போறான் தமிழன் உள்ளிட்ட பாடல்களை எழுதியவர். தொடர்ந்து இந்தப் படத்தின் கம்போசிங்கையும் தமன் கடந்த மாதத்திலேயே துவங்கிவிட்டார்.

சரத்குமார் வெளிப்படை
இந்தப் படத்தில் சரத்குமார், பிரபு உள்ளிட்ட முக்கிய நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர். இதனிடையே சரத்குமார் இந்தப் படம் குறித்து தற்போது சில விஷயங்களை அவரது பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். தற்போது அவர் பொன்னியின் செல்வன், வாரிசு உள்ளிட்ட அடுத்தடுத்த 10 படங்களில் நடித்து வருகிறார்.

நம்பர் ஒன் விஜய்
இந்நிலையில் இந்திய அளவில் நடிகர் விஜய் நம்பர் ஒன்றாக இருப்பது குறித்து அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். பான் இந்தியா படங்களில் பார்க்கும்போது புகழ்மிக்க நடிகர்களில் விஜய் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அவருடைய நடிப்புத் திறமை மற்றும் பொறுமை தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பவர்புல்லான கதைக்களம்
வாரிசு படம் மிகவும் பவர்புல்லான கதைக்களத்துடன் உருவாகி வருவதாகவும் சரத்குமார் தெரிவித்துள்ளார். விஜய்யின் வாரிசு படம் பேமிலி டிராமா மட்டுமில்லை என்றும் அதில் ஆக்ஷன், காமெடி, என்டர்டெயின்மெண்ட், சாங், பைட் என இந்தப் படம் கூட்டுக் கலவையாக சிறப்பான படமாக உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் தில் ராஜு
இதே கருத்தையே முன்னதாக படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவும் தெரிவித்திருந்தார். குடும்ப சென்டிமெண்டை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி வந்தாலும் விஜய் படத்திற்கேயுரிய காமெடி, ஆக்ஷன் உள்ளிட்ட அனைத்தும் இந்தப் படத்தில் சிறப்பாக அமைந்துள்ளதாக அவர் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











