Nepoleon: நெப்போலியன் ஃபேமிலிக்காக கடவுள் கொடுத்த கிஃப்ட்.. சரத்குமார் -ராதிகா ஜோடியாக சொன்னத பாருங்க
டோக்கியோ: நடிகர் நெப்போலியன் மூத்த மகன் தனுஷின் திருமணம் இன்றைய தினம் ஜப்பானில் மிகவும் விமரிசையாக நடந்து முடிந்துள்ளது. கடந்த சில தின மாதங்களுக்கு முன்பு இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்றைய தினம் ஜப்பானில் திருமணமும் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாகவே ஜப்பானில் இவர்கள் தங்களது கொண்டாட்டத்தை மேற்கொண்டு வந்தனர். திருமணத்தை ஒட்டி நேற்றைய தினம் மெஹந்தி, ஹல்தி உள்ளிட்ட கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டன. தொடர்ந்து சங்கீத் நிகழ்ச்சியும் நடக்கவுள்ள நிலையில் இதற்கான ரிகர்சல்களில் குஷ்பூ, நெப்போலியன் உள்ளிட்டவர்கள் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது. மணமகள் அக்ஷயாவையும் கலா மாஸ்டர் ஆட்டிவித்து வருகிறார்.

தனுஷ் & அக்ஷயா திருமணம்: நெப்போலியன் -ஜெயசுதா தம்பதியின் மூத்த மகன் தனுஷ் மற்றும் அக்ஷயாவிற்கு இன்றைய தினம் ஜப்பானில் வெகு விமரிசையாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்களது நிச்சயதார்த்தம் தமிழகத்தில் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்தத்தில் தனுஷ் நேரடியாக பங்கேற்க முடியாத நிலையில் வீடியோ கால் மூலம் அவர் இணைந்திருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் ஜப்பானில் தனுஷ் விருப்பத்திற்கு ஏற்றாற்போல திருமணம் நடந்து முடிந்துள்ளது. நேற்றைய தினம் திருமணத்தை ஒட்டி ஹல்தி, மெஹந்தி போன்ற நிகழ்வுகளும் சிறப்பான கொண்டாட்டங்களாக நடந்து முடிந்துள்ளன.
கடவுள் கொடுத்த கிஃப்ட்: இந்த திருமணத்தில் பங்கேற்பதற்காக நடிகை மீனா, ராதிகா, சரத்குமார், கலா மாஸ்டர், பாண்டியராஜன் உள்ளிட்ட பலரும் ஜப்பானில் உள்ளனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் குடும்பமாக பங்கேற்ற சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் இருவரும் திருமணம் குறித்து தங்களது மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பகிர்ந்துள்ளனர். எங்கேயோ பிறந்து தனுஷிற்கு மனைவியாகியுள்ள அக்ஷயா, நெப்போலியன் குடும்பத்தினருக்கு கடவுள் கொடுத்த மிகப்பெரிய கிஃப்ட் என்று அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். சிரித்த முகத்துடன் அனைவரையும் எதிர்கொள்ளும் அக்ஷயா குறித்து ராதிகாவும் பாராட்டியுள்ளார்.
நெப்போலியனுக்காக சண்டை: நெபோலியனுடன் நீண்ட ஆண்டுகளாக தாங்கள் நட்பில் உள்ளதாகவும் தனுஷ் சிறுவனாக ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தபோது தன்னுடைய மகள் ரேயானுடன் அவர் விளையாடியதையும் ராதிகா நினைவு கூர்ந்துள்ளார். கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட படங்களில் தான் நெப்போலியனுடன் நடித்த நிலையில், பாரதிராஜா சிறிதாக திட்டினாலும் நெப்போலியன் உடைந்து அழுவார் என்றும் அந்த அளவிற்கு அவர் குழந்தை மனம் கொண்டவர் என்றும் ராதிகா பாராட்டியுள்ளார். அவரை தான் சமாதானப்படுத்துவதுடன் அவருக்காக பாரதிராஜாவிடம் சண்டை போட்டுள்ளதாகவும் ராதிகா மலரும் நினைவுகளை பகிர்ந்துக் கொண்டார்.
ஜப்பான் மக்களின் மரியாதை: இதனிடையே, தாங்கள் நீண்ட காலங்களாகவே ஜப்பானிற்கு வர முயற்சித்து வந்த நிலையில் தற்போது தனுஷ் திருமணத்தில் அது நிறைவேறி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஜப்பானில் மக்கள் தொகை அதிகமாக இருந்த போதிலும் அவர்கள் கொடுக்கும் மரியாதை உள்ளிட்டவை மிகப்பெரிய அளவில் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளதாகவும் ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் பேசியுள்ளனர். அவர்களிடம் இந்த திருமணம் குறித்து நடிகை சுகாஷினி பேட்டி எடுப்பதாக தற்போது வீடியோ வெளியாகியுள்ளது. திருமணத்தில் பட்டுப்புடவை சகிதம் பங்கேற்ற இவர்கள் தற்போது இந்த பேட்டி வீடியோவிலும் அதே கலகலப்புடன் பங்கேற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications











