சுப்ரீம் ஸ்டார்னா சும்மாவா! நழுவிய நடிகர்களுக்கு மத்தியில் ஹேமா கமிட்டி குறித்து சரத் நச் பதில்!

சென்னை: இந்தியா முழுவதும் உள்ள ஒட்டுமொத்த திரையுலகமும் மிகவும் கூர்மையாக கவனித்து வரும் விஷயம் என்றால் அது மலையாள சினிமா உலகை குலுக்கி வரும் ஹேமா கமிட்டி விவகாரம்தான். நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள், அது தொடர்பாக கேரள மாநில அரசே உருவாக்கிய, ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டியை உருவாக்கியது. கடந்த 2017ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தக் கமிட்டி, அளித்த அறிக்கை மலையாள சினிமாவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, தமிழ் சினிமா நடிகர்கள், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பொறுப்பாளர்களிடமும் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் இந்தக் கேள்விக்கு பலரும் நேரடியான பதிலைக் கூறவில்லை. இப்படியான நிலையில், நடிகர் சரத்குமார் ஹேமா கமிட்டி குறித்து மிகவும் விரிவாக பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார் ஹேமா கமிட்டி குறித்து பேசியதாவது, “ ஹேமா கமிட்டி அறிக்கையில் உள்ள 281 பக்கங்களில் 160 பக்கங்களை நான் படித்துவிட்டேன். இந்த விவகாரம் குறித்து நாம் நன்கு தெளிவாக பேச வேண்டியுள்ளது. ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக நான் ஏனோ தானோ என்று பேச விரும்பவில்லை. சினிமா துறை மிக மோசமாக உள்ளது எனவும் பாலியல் துன்புறுத்தல் அதிகமாக இருக்கின்றது எனவும் ஹேமா கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

sarathkumar hema committee vishal

யாரோ குறிப்பிட்ட சிலர் மீது அவதூறு பரப்பும் நோக்கத்தில் அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு ஹேமா கமிட்டி அறிக்கையில் தனிப்பட்ட தாக்குதல் எதுவும் இல்லை. எனவே, ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விசாரணை அறிக்கையை எளிதாக புறந்தள்ளிவிட முடியாது. தற்போது சில நடிகர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நடிகர்கள் தவறு செய்தார்களா இல்லையா என்பதை நிரூபிக்க வேண்டியது அவர்களின் கடமை.

வளர்ப்பு: டெல்லியில் நிர்பயா , கொல்கத்தாவில் மருத்துவர் எனப் பெண்கள் மீதான அத்துமீறல் நிகழ்வுகள் நாட்டில் எல்லா இடங்களிலும் நடக்கிறது. எல்லா துறைகளிலும் நடக்கின்றது. பெண் காவல் அதிகாரிகளே பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். ஏதோ ஒரு சூழ்நிலையில் இது போன்று நடக்கின்றது. இதனைப் பார்க்கும்போது எம்.ஜி.ஆர் அவர்களின் பாடல்தான் நினைவுக்கு வருகின்றது. அதாவது, 'எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே'. குழந்தைகளை வளர்க்கும்போதே பல நல்ல விஷயங்களைச் சொல்லி வளர்க்க வேண்டும். இந்த மாதிரியான விஷயங்களில் மற்றவர்கள் என்ன செய்தனர், அவர்கள் தவறு செய்யத்தூண்டியது எது என யோசிப்பதைக் காட்டிலும், நம் மக்களை நாம் எப்படிச் சீர்படுத்த வேண்டும் என சோசிப்பதே சரியானதாக இருக்கும்.

sarathkumar hema committee vishal

ராதிகா பேசிய விவகாரம்: கேரளாவில் நடிகைகளின் கேரவனில் கேமரா வைத்திருந்தது குறித்து எனது மனைவி பேசியிருந்தார். இந்த விவகாரத்தை அப்போதே சொல்லாமல் ராதிகா எதற்காக இப்போது சொல்கிறார் என்று பலர் குற்றம் சாட்டுகின்றனர். பாதிக்கப்பட்ட நடிகைகள் அனைவரும் வெளிப்படையாக பேசவேண்டும் என்ற நோக்கத்தில்தான் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைத்துள்ளார். என்ன பொறுத்தவரை அனைவரும் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். பெண்களுக்குப் பாதுகாப்பைத் ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி சொன்னதைப் போல் பாலியல் புகார்களில் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை கிடைக்கும் எனத் தெரிந்தால் தான் இதைத் திருத்த முடியும்.

sarathkumar hema committee vishal


சாதாரண தலைவன் இல்லை:
பிக்பாஸ் நடிகை யாரும் என்னிடம் புகார் தரவில்லை. நான் பிக்பாஸ் பார்ப்பதில்லை. அதேபோல் நான் மற்றவர்களைப் போல் சாதாரண தலைவன் கிடையாது. இந்த விவகார குறித்து தெளிவாக பேசவேண்டும் என்பதற்காக 160 பக்கங்கள் படித்துவிட்டு உங்களிடம் வந்து பேசுகின்றேன். என்னிடம் புகார் கொடுத்தால் பார்க்கிறேன், எனக் கூறி தள்ளிப்போட மாட்டேன். உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டியை போல எல்லா மாநிலங்களிலும் கமிட்டி அமைக்க வேண்டும்.

வளர்ப்பு: டெல்லியில் நிர்பயா , கொல்கத்தாவில் மருத்துவர் எனப் பெண்கள் மீதான அத்துமீறல் நிகழ்வுகள் நாட்டில் எல்லா இடங்களிலும் நடக்கிறது. எல்லா துறைகளிலும் நடக்கின்றது. பெண் காவல் அதிகாரிகளே பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். ஏதோ ஒரு சூழ்நிலையில் இது போன்று நடக்கின்றது. இதனைப் பார்க்கும்போது எம்.ஜி.ஆர் அவர்களின் பாடல்தான் நினைவுக்கு வருகின்றது. அதாவது, ’எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே’. குழந்தைகளை வளர்க்கும்போதே பல நல்ல விஷயங்களைச் சொல்லி வளர்க்க வேண்டும். இந்த மாதிரியான விஷயங்களில் மற்றவர்கள் என்ன செய்தனர், அவர்கள் தவறு செய்யத்தூண்டியது எது என யோசிப்பதைக் காட்டிலும், நம் மக்களை நாம் எப்படிச் சீர்படுத்த வேண்டும் என சோசிப்பதே சரியானதாக இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X